குடும்பமெனும் கூடுவிட்டு

1.1K 51 0
                                    

செவ்வானமாய் கோலமிட்ட காலைப் பொழுது. சமையலரையில் சட்டினிக்காக தாளிக்கும் சத்தம் கூட இன்னிசையாய் ஒளித்தது அவ்வீட்டில். ஜாகிங் முடித்து வந்த ஸ்மிதாவின் தந்தை கையிலோ தினமலர்.  துண்டினால் முகம் துடைத்து சோபாவில் அமர்ந்த போது மணி எட்டு.

"சுதா,  சூடா ஒரு கப் காஃபி குடேன்"

சமையலில் மும்முரமாக இருந்தவரோ,

"வர்றேன் வர்றேன் " என தாளித்து கொட்டிவிட்டு ஏற்கனவே போட்டு வைத்திருந்த இரண்டு கப் காஃபியோடு வெளியே வந்தார்.

"பரவாயில்லையே இன்னிக்கு ரெண்டு கப்பா சூப்பர் சுதா"

"ஆசை தான். வயசானாலாச்சும் கொஞ்சம் அறிவு வளருதா" என சலித்துக்கொண்டவரைப் பார்த்து புன்முறுவலுடன்,

"அதெல்லாம் 21 வருசம் முன்னாடியே நின்னுடுச்சு "

" இல்லேனா மட்டும் அறிவு பெறுக்கெடுத்திரும் பாருங்க "

"ஏன்டி.. கட்டுன புருஷனை இப்டியா கிண்டல் பண்ணுவ "

"நீங்க மட்டும் அப்டியா நடந்துக்குறீங்க "

"ஏன் அப்டி இல்லாமலா நமக்கு ஒரு பொண்ணு பொறந்திருக்கா" என்று மர்ம புன்னகை பூத்தவரிடம்,

" சே !  பேச்சப் பாரு ; இப்பதான் இளமை ஊஞ்சல் ஆடுதோ?" என்று கேட்க சந்திரன் பேசத் தொடங்கும்முன்
இளஞ்சிவப்பு வண்ண சுடிதாரில் கையில் பெரிய பையுடன் பாந்தமாய்  வெளியே வந்தாள் ஸ்மிதா.

மகளின் அழகை பெருமையுடன் ரசித்த சந்திரன் மனைவியிடம், 

"பார்த்தியா என் மகள இந்த வீட்டுக்கே பிரகாசம் தராப்ல வர்றா "

"நீங்க தான் மெச்சிக்கனும். இப்டியே தலைல தூக்கி வச்சு ஆடுங்க. கிழம்பிட்டா இப்ப சந்தோசமா ?"

இடையில் புகுந்த ஸ்மிதா,
"ம்மா. திரும்பவும் ஆரம்பிக்காத. Just 7 Days. டக்குன்னு ஓடிடும். "

"ஓஹோ.. அதான்  தெரியுமே. இப்பலாம் நல்லா தான் பேசற.  Friendsங்க கூட இருந்தா மட்டும் எங்க நியாபகமே இருக்காது "

என்றபடியே மகளுக்கு காஃபியைக் குடுத்துவிட்டு உணவு எடுத்துவைக்கச் சென்றார்.

உடனே சந்திரன்,
"ஏன்டா போயே தீரனுமா"

"என்னப்பா நீங்களுமா"

"அதுக்கில்லமா. உன்ன பிரிஞ்சு நாங்க ஒரு நாள் கூட இருந்ததில்லேல அதான் "

சிறிய மௌனத்திற்கு பின்,

"சரிபா.  வேணாம். நா போகல "
என முகம் கருக்க ஸ்மிதா அமர,

"அடடா!  என்  செல்லப் பொண்ணு முகம் சோகமாய்டுச்சு. ம்ம்ம்...... சரிடா பத்திரமா போய்ட்டு வா" என்றார்.

"தேங்க்ஸ்பா" என்று முகம் மலர்ந்தாள்.

அந்த நேரம் வந்த சுதாவோ,
"அதான பார்த்தேன். அப்டியே தாஜா பண்ணிடுவியே. நல்ல அப்பா. நல்ல மகள்.  சீக்கிரமா சாப்பிடனும்ல வாங்க  "என்று துரிதப்படுத்தினர்.

மகளோ,

"அம்மாமா.....  என் Sweet girl. அப்பாவ okay சொல்ல வைக்க ஐடியா குடுத்ததுக்கு Thank youuuu"  என்று செல்லம் கொஞ்சினாள்.

"அடிப்பாவி. எல்லாம் உன் வேல தானா" என சந்திரன் மனைவியைப் பார்க்க, 

அவரோ புன்னகையோடு, "பின்ன அவ என்ன சின்னப் பொண்ணா.  அவள பார்த்துக்க அவளுக்கு தெரியாதா "

"நீ சொன்னாலும் சொல்லாட்டியும் எப்பவுமே எனக்கு அவ சின்ன பொண்ணுதான் "

"சூப்பர் பா.. "

இருவரும் ஹைஃபை கொடுத்துக்கொண்டனர்.

மிகுந்த சந்தோஷத்தோடு செல்லும் அவள் வாழ்வின் அடுத்தக்கட்ட மாற்றங்களை அவள் அறிவாளா? கூட்டைவிட்டு பறக்கும் காலம் வெகுவிரைவில்.  பொறுத்திருந்து பார்ப்போம்.
______________________________________

காதல் சுகமானது❣❤❣(முடிவுற்றது)Where stories live. Discover now