முதற் பார்வையிலேயே வீழ்ந்துவிட்டேன்

962 77 7
                                    

பேருந்து கோயம்புத்தூர் மாவட்டத்தின் வால்பாறை எனும் அழகிய ஊர் நோக்கி சென்று கொண்டிருந்தது. சன்னல் அருகே உள்ள இருக்கையில் அமர்ந்திருந்தாள் ஸ்மிதா.

தோழிகள் கும்மாளமிட்டபடி ஆடிக்கொண்டிருந்தனர். சிறிது நேரம் சென்றபின் அனைவரும் களைப்புடன்
உறங்கிப்போக அவள் மட்டும் வெளியில் உள்ள இயற்கை காட்சிகளை ரசித்த வண்ணம் இருந்தாள்.

அந்த நேரம் வண்டி ஓட்டிக் கொண்டிருந்த ஓட்டுனர் சிறிது ஓய்வெடுக்க எண்ணி ஒரு டீக்கடையின் அருகே நிறுத்தினார். அவரும் ஒன்றிரண்டு ஆசிரியர்களும் அந்த மற்றும் அதைத் தொடர்ந்த பேருந்துகளில் இருந்தும் இறங்கினர். 

வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டி ருந்தவளுக்கு அந்த காட்சி தென்பட்டது.

ஒரு செழிப்பான காரின் மீது அமர்ந்திருந்தவனின் கையில் ஓர் அழகிய நாய்க்குட்டி. அதனோடு உறையாடிக் கொண்டிருந்தான் நம் கதையின் நாயகன் ஹரீஷ்.

"என்னடா குட்டி பையா ! ஏன் இப்டி முழிக்கிற? என் கூடவே வந்துறியா? உன்ன பத்ரமா பார்த்துக்றேன்.  ஓகேவா? "
என கேட்டவனுக்கு வருகிறேன் என்பது போல தலையை நாலாபுறமும் ஆட்டியது அச்சிறு ஜந்து.

இருவரின் உறையாடலைக் கேட்டவளின் இதழிலோ மெல்லிய புன்னகை அரும்பியது.

அப்போது மற்றொருவன் பின்பக்கத்தில் இருந்து வந்தபடியே  ஹரீஷிடம்,

"டேய்! உனக்கு  வேற வேலையே இல்லையா. இதே பொலப்பாப் போச்சு" என எரிச்சலுற்றான். 

அவனுக்கு ஒரு புன்னகையையே பரிசாய் கொடுத்தான் முன்னவன்.

அப்போது அவனது நண்பன் அவர்கள் பேருந்தை சுட்டிகாட்டி ,

"ஹே அங்க பாரேன். காலேஜ் பஸ் மாறி இருக்கு..pretty girls ல...  அதுல ஒரு Cute ஆன பொண்ணு கூட உன்னையே Sight அடிச்சுட்டு இருக்கா...  Lucky தான்டா நீ " என்று கலாய்க்க ஹரீஷும் அவ்விடம் நோக்கினான். 

அதனை பார்த்துக் கொண்டிருந்தவள் அவர்கள் பேச்சின்மூலம் தன்னைப்பற்றி கூறியதை உணர்ந்து படபடத்து சட்டென வேறுபுறம் திரும்பினாள்.

அவளது படபடப்பையும் முகபாவங்களையும் கண்ட ஹரீஷிற்கு உள்ளம் ஏதோ செய்தது.

"ம்ம்.. Cute ஆ தான் இருக்கா" என்று தன்னை மறந்து ரசித்தபடியே நண்பனிடன் கூறினான்.

அவ்வார்த்தைகள்  காதில் விழ சிவந்த தன் கன்னங்களை மறைக்க பெறும்பாடுபட்டு சற்று கோபமாக வைத்துக் கொண்டே தலை குனிந்து உயிர்பிக்காத தன் கைபேசியைப் பார்த்தாள்.

அதைக் கண்ட அவன் விழிகளில் மேலும் ஆர்வம் கூடியது. அச்சமயம் இறங்கிய அனைவரும் பேருந்துகளில் ஏறிவிட பேருந்துகளும் கிளம்பியது.

'அப்பாடா ' என்ற பெருமூச்சோடு நிமிர்ந்து அவ்விடம் பார்த்தாள்.  அவனோ இன்னும் அவளையே குறுநகையோடு பார்த்துக் கொண்டிருந்தான்.

தன்னையும் மறந்து  அவ்விழிகளின் மந்திரத்திற்கு கட்டுப்பட்டாற்போல அகப்பட்டாள். பேருந்தும் அந்த இடத்தை விட்டு மெல்ல அகன்றது. சிறு ஏக்கத்தோடு பிரிந்த அவ்விழிகள் மீண்டும் சந்திக்கும் நாளும் வெகுவிரைவில்.
_________________________________________

கதைய வாசிக்கும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் ஒரு வேண்டுகோள். Vote பண்ணவும் Comments குடுக்கவும். 😊
Stay positive stay happy.

காதல் சுகமானது❣❤❣(முடிவுற்றது)Where stories live. Discover now