எனக்காக 5

Start from the beginning
                                    

அவனுக்கு ஏற்றவளை கூடிய சீக்கிரமே அம்மன் தனக்கு காட்டுவாள் என்ற எண்ணம் மனதில் தோன்றியது, நெஞ்சு நிறைந்த நிம்மதியோடு கண்களை திறந்து தாயை கும்பிட்டவர் திரும்ப தன் எதிரில் கண்களை மூடி அம்மனை வழிபாட்டுக் கொண்டிருந்த அவளைக் கண்டார்.

வட்டமான முகம், நெற்றியில் வைத்திருந்த சாந்துபொட்டும் விபூதியும் முகத்திற்கு களை சேர்த்தது. அளவான உயரத்தில் சுடிதாரில் இருந்த அவளை கௌஷிக்குடன் மணப்பெண்ணாக  கற்பனை செய்து  பார்த்தபடி நின்றிருந்த அவரை ஐயரின் மந்திர ஒலியே நிகழ் காலத்திற்கு கொண்டு வந்தது.

தன்னுடைய நினைவை நினைத்து ஒரு நிமிடம் அதிர்ந்தவர் அடுத்த நிமிடம் அம்மனை பார்த்து பரவசத்துடன் வணங்கினார்.

அம்மா இவதான்னு சொல்கிறாயான்னு தெரியலை. ஆனா இவள் தான்னா அவங்க இரண்டு பேரையும் சேர்த்து வைக்க எனக்கு  வழிய காமிமா என்று வேண்டியவர் பிரசாதத்தை வாங்கிக் கொண்டு வெளியே வந்தார்.

வெளிப் பிரகாரத்தில் உக்கார்ந்திருந்தவர் கண்களில் தனக்கு முன்னமே சாமிகும்பிட்டு விட்டு வந்த  தன் மருமகன் ஒருவருடன் பேசிக்கொண்டிருப்பது தெரிய மறுபடியும் அந்த பெண்ணின் மேல் தன் பார்வையை திருப்பினார் .

இவரை போலவே அந்த பெண்ணும் வெளி பிரகாரத்தில் அமர்ந்து கூட இருந்த பெண்ணிடம் பேசிக் கொண்டிருந்தாள்.

இவர் அவளுடன் பேசலாம் இல்லை என்றால் எப்படி அவளைப் பற்றி தெரிந்து கொள்வது என்ற நினைப்புடன் எழப்போக 

அதற்குள் அந்த பெண் எழுந்து தன் மருமகனுடன் பேசிக்கொண்டிருந்த அந்த மனிதரை நெருங்கினாள்

பின்னர் அவளும் அந்த மனிதரும் அவர் மருமகனிடம்  சொல்லிக் கொண்டு கிளம்பினர்.

இவரும் எழுந்திருக்க
  போலாமா அத்தை ? என்று கேட்டவாறு அவர் மருமகனும் அருகில் வந்தார்.

போலமுங்க மாப்பிள்ளை.

சிறிது தூரம் நடந்தவர் கோவில்ல நீங்க பேசிட்டு இருந்தவங்க தெரிஞ்சவங்களா?... ஏன்னா எங்கையோ பார்த்த மாதிரி இருக்குது என்று மெதுவாக ஆரம்பித்தார்.

உண்மையாகவே அந்த மனிதரை எங்கோ பார்ததுது போலவே அவர்க்கு இருந்தது.

பார்த்திருப்பீங்க அத்தை .. நம்ம சொந்தக்காரர் தானுங்க. மாமா வழி சொந்தம் உங்களுக்கு வரும் என்று சொன்னவர் எப்படி சொந்தம் என்று சொல்ல அதை கூர்மையாக கவனித்தார் அம்பிகா .... ஏன் என்றால் தன் கணவரின் சொந்தம் என்றால் கௌஸிக்கிற்கும் சொந்தம் ஆகுமே 😀.

தன் மருமகனின் சொந்த பந்த கணக்குகள்  படி பார்த்தால் அந்தப் பெண் கௌஸிக்கிர்க்கு மணக்கும் முறையே வருகிறது என்பதை எண்ணியவுடன் குதிக்க வேண்டும் போல இருக்க தன் உணர்வுகளை அடக்கினார்.

கூட இருந்தது அவரு மகளுங்களா?

இல்லைங்க அத்தை.. அந்த புள்ள வசந்தனோட ( கோவில்ல பார்த்த மனிதர்) அண்ணன் மகளுங்க ... ஆத்த அப்பன் இல்லை , அதனாலே வசந்தன் தான் வளத்தினாப்ல்ல, அதும் படுச்சிட்டு கோயம்புத்தூர் ல தான் வேலை செய்யுதுங்களாமா, நல்ல புள்ள... நீங்க status பார்க்களைனா   கௌசிக்கோ அகி க்கோ கூட  பார்க்கலாம்.

Status என்ன மாப்பிள்ளை அது கிடக்குது வர்ற புள்ளைங்க நல்லா  இருக்கணும் குணமா இருக்கணும் அவ்ளோ தான்.

அப்படினா ஜாதகம் கேக்கட்டுங்களா?

கௌஸிகிர்க்கு வருபவளைப் பற்றி நன்கு அறிந்த பின்னர் ஒரு முடிவு எடுப்போம் என்று நினைத்தவர்
மொதல்ல பசங்க கல்யாணத்துக்கு ஒத்துக்கணும்ல , ஒருத்தன் கல்யாணமே வேண்டாம்ன்னு இருக்கான். இன்னொருத்தன் foreign ல இருந்து  வரணும்ல , அதனால் கொஞ்சம் களிச்சு பார்ப்போம் என்க,

அதும் சரி தான் என்று மருமகனும் ஒத்துக்கொண்டு நடந்தார்.

மும்பை வந்தவுடன் முதல் வேலையாய் தன் பிள்ளையின் நம்பிக்கையான மேனேஜர் கேசவன் மூலம் பிரைவேட் டிடெக்டிவ் ஆட்களை வைத்து அந்த பெண்ணைப் பற்றி அனைத்து தகவல்களையும் பெற்றார்.

பின்பு அகிலன் தான்வி மற்றும் கேசவன் ஆகியோரிடம் கலந்து பேசி இந்த திட்டத்தை தீட்டினர்.

அதுக்கு கௌசிக் ஒத்துகொள்வானா ? தான்வியை போல  சந்தேகம் மனதில் பெரிய அளவு இருந்தாலும் தன் குலதெய்வத்தின் மேல் உள்ள நம்பிக்கையில் அவர் மனதில் ஆறுதல் தோன்றியது.

எனக்காகவே பிறந்தவள்Where stories live. Discover now