மீழ வழியில்லை ❤

907 64 3
                                    

ஊருக்குள் நுழைந்த அவர்கள் சிறு சிறு குழுக்களாக ஆசிரியர்களால் பிரிக்கப்பட்டனர். பின் ஒவ்வொரு குழுக்களில் இருந்தும் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு தம் குழுவில் உள்ள அனைவரும் எப்போதும் இருப்பதை உறுதி செய்து கொண்டனர் .

அதைத்தொடர்ந்து ஹோட்டலில் இருவருக்கு ஒரு அறை என ஏற்கனவே முன் பதிவு செய்திருந்த அறைகளில் சென்று அனைவரும் பயண களைப்பை போக்கினர்.

ஆனால் ஸ்மிதாவின் மனமோ அமைதியற்று தவித்தது. ஏனோ அவனது விழிகள் மீண்டும் மீண்டும் கண்முன்னே தோன்றி மறைந்தது. இருப்பினும் இது சரி அல்ல என மனதை முயன்று வேறு சிந்தனைகளில் ஆழ்த்தினாள். இதனால் நேரம் செல்ல செல்ல அந்நினைவுகளிலிருந்து முற்றிலும் விடுபட்டாள்.

இது கல்விச்சுற்றுலா என்பதால் இதில் சில சொற்பொழிவுகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாணவிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஆசிரியர்களிடம் சமரசம் பேசி அதை ஒன்றோடு நிறுத்திக் கொண்டனர். ஆசிரியர்களும் சில நடைமுறை வகுப்புகளோடு ஒத்துக் கொண்டனர்.

அடுத்த நாளின் மாலைப் பொழுதில் இயற்கை சொற்பொழிவு ஒன்று நடப்பதாக கூறினர்.

அனைவரும் ' ஐயோ யார் வந்து மொக்கை போறாங்ளோ' என சலிப்புடன் இருந்தனர் ;ஒரு சில படிப்பாளிகளை தவிர்த்து. ஸ்மிதாவிற்கோ இயற்கை தொடர்பானது என தெரிந்தவுடன் மிகவும் ஆர்வமுடன் அமர்ந்திருந்தாள்.

50 வயது ஒட்டிய ஒருவரை எதிர்பார்த்திருந்த அவர்களுக்கோ 25 வயதே நிரம்பிய ஒரு ஆண்மகனை காண்கையில் அதிர்ச்சியாக இருந்தது.

வந்திருந்தவனை கண்ட ஸ்மிதாவிற்கோ பேரதிர்ச்சி.

' அவனேதான் ஆனால் இங்கு எப்படி'

என்ற குழப்பத்திற்கு அவனே பதில் அளிக்கும் வகையில் பேசத் தொடங்கினான்.

"Hi guys. I'm Harish . Past 1 year ஆ நிறைய colleges கு guess lecture குடுத்துட்டு வரேன் . So, நான் தான் இன்னிக்கு உங்களுக்கு இயற்கையை பத்தியும் அத conserve பண்றதால நமக்கு கிடைக்க போற benefits பத்தியும் சொல்ல போறேன். Don't panic. அவ்ளோ மொக்கையா இருக்காது. ஆனா அப்பப்ப Questions கேட்டு answer பண்ணாதவங்கள எல்லாத்துக்கும் முன்னாடி வந்து பாட சொல்லிடுவேன். அதனால கவனமா கேளுங்க..." என ஆரம்பித்து ஏதேதோ பேசினான்.
தோழிகள் சிரித்தனர்; ரசித்தனர்; நன்கு கவனித்தனர்;

ஆனால் ஸ்மிதா விற்கு தான் எதுவும் ஏறவில்லை.

'ஹரிஷ்.. நல்ல பேர்தான்' மனதில் சொல்லிக் கொண்டாள்.

உத்வேகமான நடை; எப்போதும் துருதுருவென தோன்றும் கண்கள்; தீர்க்கமான பாவனை; அலைபாயும் கேசம்;

'கோதிவிட்டாள் எப்படி இருக்கும்?' என யோசித்துக்கொண்டே போனவளுக்கு தன் எண்ணம் கண்டே 'ச்செ' என்றானது.

'என்னாச்சு உனக்கு ஷ்ஷ்' என தன் மனதை அடக்கினாள்.

முகம் தெரியாதவாறு சற்று குனிந்து அமர்ந்து கொண்டாள். மேலும் இந்த ஏழு நாட்களும் அவர்களுக்கு இது சம்பந்தமான பல புதிய வகை தாவரங்கள் மற்றும் அரியவகை உயிரினங்களை குறித்து தெளிவு பெற தங்களோடு இருக்கப் போவதாகவும் ஒரு பெரிய இடியை அவள் தலையில் இறக்கினான். இருப்பினும் எவ்வித சந்தேகங்கள் இருந்தாலும் தம் ஆசிரியர் மூலமே அவனிடம் கேட்கலாம் என விளக்கம் அளித்தான்.

இதே சிந்தனையில் அவள் மூழ்கி இருக்க அப்போதுதான் ஒருவர் பின் ஒருவராக முக்கால்வாசிக்கும் மேலாக எல்லோரும் தமது அறைகளுக்கு சென்றதை அவள் உணர்ந்தாள்.

அவன் ஒரு ஆசிரியரோடு உரையாடிக் கொண்டிருக்க ,
'நல்ல வேல பாக்கல' என எண்ணியவாறு சப்தமில்லாமல் வெளியேற எத்தனித்தாள்.

ஆனால், அவள் நல்ல நேரம் அவ்வளவு சுலபத்தில் விட்டு விடுமா.

" ஹே ஸ்மிதா. வேமா வா; நம்ம team ல எல்லாரும் போயாச்சு"

என ஆர்த்தி கூச்சலிட எதார்த்தமாய் அப்பக்கம் திரும்பியவன் கண்டு கொண்டான்  தன்னவளை.

கண்களில் ஆர்வத்தோடு ,
'இவ்ளோ நேரமா உன்ன தான் தேடிட்ருந்தேன். இங்கேயே தான் ஒளிஞ்சிருந்தியா. முழிக்கிறத பாரு . நல்லா doll மாதிரி'

என மனதில் நினைத்தவன் அவள் தாண்டி செல்கையில் பேச எத்தனிப்பது போல தொண்டையைக் கரகரத்தான்.

அவ்வளவுதான். ஓடியே விட்டாள். வினோதமான அவள் நடவடிக்கையின் காரணம் புரியாமல் அவள் பின்னே ஓடினாள் ஆர்த்தி.

ஹரிஷ் மட்டும்,
' ஓடு !ஓடு ! நீ எவ்வளவு தூரம் ஓடுறன்னு நானும் பாக்கறேன்' என்றான் மனதோடு.

உள்ளம் மறைத்தாலும் உணர்வுகள் மறுக்கப்படுமா? காலமே பதில் சொல்லும்.
_____________________________________

ஹே மக்களே. எப்படி இருக்கு இந்த chapter. கதை ரொம்ப குட்டி. So, அடுத்தடுத்து டக்கு டக்குனு முடிஞ்சுடும்.
Stay happy stay safe☺️💞

காதல் சுகமானது❣❤❣(முடிவுற்றது)Where stories live. Discover now