ரோகினி ஒரு நிமிடம் இது தனது chief தானா என்று கண்களை வெட்டி வெட்டி அவனை பார்த்தவள் அதன் பின் தன் வேலையை பார்க்க சென்றுவிட்டாள் .அதிகம் இல்லை என்றாலும் கொஞ்சம் அவனின் கடுமை குறைந்திருந்தது அன்று .

அங்கு வேலைப்பார்க்கும் மேஸ்திரி ஒருவர் கேட்டே விட்டார் "என்ன சார் எப்போவும் கடு கடுன்னு பேசுவீங்களே இன்னைக்கு முகத்துல கொஞ்சம் சிரிப்பு இருக்கு "என்க

அவனோ லேசாய் புன்னகைத்தவன் ஒன்றும் கூறாமல் சென்றுவிட்டான் .அதன் பின் அன்று இரவு என்றும் ஒன்பது மணிக்கு அழைப்பவன் அன்று ஒன்பதே கால் ஆகியும் அழைக்க வில்லை .பாதி உணவை உண்டுகொண்டிருந்தவள் கைக்கடிகாரத்தையும் தொலைபேசியையும் மாற்றி மாற்றி பார்த்தாள் "என்ன இவன் ஒரு பொறுப்பே இல்லாம கால் பண்ணாம இருக்கான் "என்று நினைத்தபடி அவள் இருக்க அடுத்த நிமிடம் அவளை அழைத்திருந்தான் அவன் .

கௌதம் "என்ன மேடம் என்ன பண்றீங்க ?"என்க

அவளோ "என்ன இன்னைக்கு lateuh கால் பண்றதுக்கு ஒரு பொறுப்பே இல்லடா உனக்கு "என்க

அவனோ "அடிப்பாவி இப்போ தான் டி அப்பா கைல gripband போட்டுட்டு போனாரு "என்று உளறியவன் அதன் பின்னே ஐயோ என்று கண்ணை மூடிக்கொண்டான் பதறுவாளே என்று அவன் நினைத்ததை போலவே

அவளோ "grip bandaa எதுக்கு டா? என்னாச்சு கீழ விழுந்தியா ?எப்படி அடிபட்டிச்சு?எங்கேல்லாம் அடிபட்டு இருக்கு ? "என்று படபடவென்று கேட்க

அவனிற்கு அவளின் பதட்டம் ஏனோ இதமான உணர்வை கொடுத்தது தனக்கென ஒருவள் துடிக்கிறாள் என்று அவன் சற்று புன்னகையுடன் அவள் கேட்கும் கேள்விகளை கேட்டபடி அமைதியாய் இருக்க

அவள் "நா கேட்டுட்டே இருக்கேன் என்னடா கனவு கண்டுட்டு இருக்க ?"என்க

அவனோ "நீ எங்கடி என்ன பேச விட்ட? பைக்ல வந்துட்டு இருந்தேன் நடுவுல நாய் வந்துருச்சி. டக்குனு பிரேக் புடிச்சதுல இடறிருச்சு .வேற ஒன்னும் இல்ல கைல லேசா பெசகிருச்சு அவ்ளோ தான் "என்க

தோழனா என் காதலனாOù les histoires vivent. Découvrez maintenant