எனக்காக 2

Start from the beginning
                                    

வடிவேலுக்கு தகவல் சொல்லியனுப்ப அவரும் மாதவனோட சித்தியும் வந்து சேர்ந்தாங்க...மூணு நாளா பாவம் புள்ள காய்ச்சல்ல அம்மா அம்மான்னு அணத்திட்டே இருந்தான்...

அவன அங்க கோயில் கிட்ட பார்த்த காட்சியே கண்ணுக்குள்ள இருந்துச்சு, பாவம் அவனும் எம்புள்ள சிவராமன் மாதிரிதானே, அதனால நைட்டெல்லாம் வடிவேலு கூட உங்க தாத்தாவ இருக்க சொல்லிட்டு, காலைல உங்க அத்தைகளையும் சிவராமனையும் ஸ்கூல்க்கு அனுப்பிவச்சுட்டு நான் ஆஸ்பிட்டல் போய்டுவேன்...

கொஞ்சம் உடம்புக்கு சரியான பின்ன டாக்டர் மாதவன வீட்டுக்கு கூட்டிட்டு போக சொல்லிட்டாரு...வடிவேலு மாதவன வீட்டுக்கு அழைச்சுட்டுப் போக அவன் நான் பெரியம்மா கூட தான் இருப்பேன்னு என்னை கட்டிப்பிடுச்சுட்டு ஒரே அழுகை...

அவன் அப்பாவும் சித்தியும் எவ்வளவோ சொல்லிப்பார்த்தும் பெரியம்மா கூட தான் இருப்பேனுட்டான்...அப்புறம் உங்க தாத்தா தான் , எங்களுக்கு மூணு பிள்ளைக இருக்காங்க அவங்களோட சேர்த்து இவன நாலாவது பிள்ளையா நாங்க பார்த்துக்கறோம்ன்னு சொல்லி வடிவேல சமாதனப்படுத்தி மாதவன எங்க கூடவே கூட்டிட்டு வந்து எங்க பிள்ளையாவே வளர்க்க ஆரம்பிச்சோம்...

சிவராமனும் மாதவனும் கொஞ்ச நாளுக்குள்ளையே ஒண்ணுக்குள்ள ஒண்ணாய்ட்டானுக...உங்க அத்தைகளும் இவனுகள விட பெரியவ 5 வயசும், சின்னவ 3 வயசும் பெரியவளுக...அதனால எந்த போட்டி பொறாமை இல்லாம பக்குவத்தோடு அந்த சின்னப்பையன சிவராமன மாதிரியே  தம்பியாவே பார்த்துக்கிட்டாளுக...

இப்படியே காலம் உருண்டோட அவனுங்க ரெண்டுபேரும் பள்ளிப்படிப்பை முடுச்சுட்டாங்க...பக்கதூர்ல இருந்த காலேஜ்லயே ரெண்டுபேருக்கும் அட்மிஷன் கிடச்சுது...

ஆனா இரண்டு பேர்த்தையும் படிக்க வைக்க எங்க கிட்ட வசதி இல்லாம போச்சு...அதனால உங்க தாத்தா வடிவேல் கிட்ட கேக்க இளையசம்சாரத்துப் பிள்ளைய படிக்க வைக்கனும்  மகளுக்கு கல்யாணம் வேற பண்ணனும்,வேன்னா அவனுக்கு வரவேண்டிய இரண்டேக்கர் நிலத்தக்கொடுக்கரேன் அத வித்து வேண்ணா அவன் படிக்கட்டும்ன்னு சொல்லிட்டாரு...

எனக்காகவே பிறந்தவள்Where stories live. Discover now