2.

3.5K 131 3
                                    

"அண்ணா நான் உங்க கூட தங்கரது உங்களுக்கு ஒன்னும் இடையூராக இருக்காதே",என்றான் ஜீவா.

ஜீப்பை ஓட்டிக் கொண்டு இருந்த  அஷ்வின் அவனை பார்த்து மெலிதாக சிரித்தான்" அது இனிமேல் தான் தெரியும்", என்றான்.ஜீவா கண்ணை உருட்டிக் கொண்டு வெளியே பார்த்தான்.

         அஷ்வின் எப்போதும் புதிரானவன்.எப்போது எப்படி நடந்து கொள்ளுவான் என்றே சொல்ல முடியாது.அவன் நண்பர்கள் அனைவரும் கார் வாங்கிய போது இவன் ஜீப் வாங்கினான்.ஆறு அடி உயரத்தில் ஒரு சினிமா நடிகன் போல இருந்தாலும் பெண்கள் இடத்தில் எந்த ஒரு ஈர்ப்பும் அவனுக்கு ஏற்படவில்லை.எப்போதும் தனிமையில் இருக்க ஆசை படுவான்.

           அவனுக்கு எதிர்மறை ஜீவா .எப்போதும் நண்பர் கூட்டம் சூழ்ந்து இருக்கும்.சிரிக்க சிரிக்க பேசுவான்.துறு துறுவென இருப்பான்.பார்ப்பதர்க்கு அவ்வளவு அழகாக இல்லாவிட்டாலும் தன் பேச்சில் அனைவரையும் முக்கியமாக பெண்களை கவர்ந்து விடுவான்.

        பேசிக் கொண்டே ஒரு பண்ணை வீட்டுக்குள் நுழைந்தார்கள்.ஒரு அழகிய வீடு நடுவில் நின்றது .அதை சுற்றி புல்வெளி இருந்தது.புல்வெளிக்கு பின்னால் ஒரு சிறிய வீடு ஒன்று இருந்தது.

பெரிய வீட்டின் வாசலில் ஜீப்பை நிறுத்தினான் அஷ்வின்."போய் சாவி

வாங்கீட்டு வா",என்றான் ஜீவாவை பார்த்து.

ஜீவா இறங்கி அழைப்பு மணியை அடித்தான்.ஒருவர் வெளியே வந்தார்."அங்கிள் நாங்க பின் வீட்டுக்கு புதுசா குடி வந்திர்கோம.சாவி குடுங்க",என்றான் இயல்பாக.

" ஒரு குடும்பமாக தங்க தான் அந்த வீட்டை வாடகைக்கு விட்டேன்.     உங்க அம்மா அப்பா வரலயா பா",என்றார் குழப்பமாக."இல்லை அங்கிள் அவங்க ஒரு மாதம் கழித்து தான் வருவாங்க.அப்பாவுக்கு கொஞ்சம் உடம்பு சரி இல்லை.அவர் அடிக்கடி போகும் மருத்துவமனை இங்கே இருந்து தூரம்.அதனால் எங்களை அனுப்பி வைத்தார்கள்",என்றான் ஜீவா தெளிவாக.

அவர் சரி என்பதை போல‌ சாவியை எடுத்து கொடுத்தார்.

  

           சாவியை வாங்கிக் கொண்டு ஜீப்பில் ஏறினான் ஜீவா.

"எதுக்கு டா பொய் சொன்ன.அப்பாவும் அம்மாவும் எப்போ இங்க வரேனு சொன்னாங்க.நாம் தங்கி படிக்க தானே இந்த வீடு.இந்த ஊர் உனக்கு புதுசுனு தானே உன்னை என்னுடன் தங்கி படிக்க சொன்னார்கள்.உனக்காக தான் என் கல்லூரி விடுதியை விட்டுட்டு இங்கே வந்தேன்.எதாவது தப்பு நடந்தால் என்னை தான் கேட்பார்கள்.எனக்கு இதல்லாம் புடிக்காது பாத்து நடந்துக்கோ",என்றான் அஷ்வின் கோவமாக.

"அய்யோ அண்ணா கோவப்படாதீங்க.யாரும் கல்லூரி பசங்களுக்கு வீடு தர மாட்டாங்க.இந்த மாதரி ஒரு அழகானஅமைதியான வீடு நமக்கு கிடைக்காது.அதனால் தான் பொய் சொன்னேன்.இதில் ஒரு பிரச்சனையும் வராது.கவலை படாதிர்கள்.",என்று கூறி ஜிவா அஷ்வின்னை பார்த்து கண் அடித்தான்.

காதலில் விழுந்தேன்On viuen les histories. Descobreix ara