❤ 04 ❤

202 23 13
                                    

திருமணத்துக்கு வெறும் 2 நாட்களே இருக்க முதல் நாளான இன்று மெஹேந்தி பங்ஷன் எனவும் திருமணத்துக்கு முந்தைய நாள் மற்ற சம்பிரதாயங்கள் என முறைப்படி ஏற்பாடு செய்யப்பட்டன.மண்டபம் பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருக்க, ஆண்கள் ஒரு பக்கம் பெண்கள் ஒரு பக்கம் என பிரித்து வைக்கப்பட்டிருந்தது. இளஞ்சிவப்பு மற்றும் வெள்ளை நிற, ரோஜாப்பூ அலங்காரத்துடன் கூடிய லெஹேங்காவில் தோழிகள் கரம் பற்றி மேடையை அடைந்தாள் ஜனனி.மணமகனுக்கென ஒதுக்கப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்திருந்த ப்ரேமின் கண்களோ அவளை விட்டு அகல மறுத்தது.தன்னவனை நிமிர்ந்து பார்த்த ஜனனி வெட்கத்தில் முகம் சிவக்க சிரம் தாழ்த்தினாள்.ப்ரேமிற்கு அத்தை முறை பெண்மணி ஒருவர்,"எல்லாம் தயாராயிடுச்சின்னா பொண்ணுக்கு மருதாணி வைக்க ஆரம்பிச்சிருங்க.." என்க,பார்லரிலிருந்து ஜனனிக்கு அலங்காரம் செய்ய வந்தவர்களில் ஒருவர் மெஹேந்தி வைக்க வர,"கொஞ்சம் இருங்க..நித்து..இங்க வா..எனக்கு நீ தான் இன்னிக்கி மெஹேந்தி வெச்சி விடனும்.." என கூற மறுப்பாக தலையசைத்த நித்யா,"நான் எதுக்கு ஜெனி..அது தான் பார்லரிலிருந்து ஆளுங்க வந்திருக்காங்களே.." என்க ஜனனி,"அதெல்லாம் எனக்கு தெரியாது..நீ வெச்சி விடலன்னா நானும் மெஹேந்தி வெச்சிக்க மாட்டேன்.."  எனக் கூற ப்ரேமின் தாய் ஜானகியும்,"அம்மாடி யுவனி..மருமக அவ்வளவு சொல்றாலே..நீயே வெச்சி விட்டுரும்மா.." என்க அனைவரும் அதற்கு ஒத்து ஊத மறுக்க இடமின்றி புன்னகைத்தவாறே மேடை ஏறினாள் நித்யா.மஞ்சளும் வெள்ளையும் கலந்த லெஹேங்காவில் சாதாரண ஒப்பனையில் ஜனனிக்கு ஈடாக வந்தமர்ந்தவள் மீதே சஜீவ்வின் பார்வை பதிந்திருந்தது.இவற்றை ஒரு ஜோடிக்கண்கள் சந்தேகத்துடனும் இன்னொரு ஜோடிக்கண்கள் வெறுப்புடனும் பார்த்துக் கொண்டிருந்தது.

நித்யா ஜனனிக்கு மெஹேந்தி வைக்க ஆரம்பிக்க சட்டென மண்டபத்தினுள் ஒளி மங்கலாகியது.ஒரு நிமிடம் அனைவரும் அதிர அடுத்த செக்கனே மணமகனும் மணமகளும் அமர்ந்திருந்த இடங்கள் மாத்திரம் ஒளியேற்றப்பட்டது.தொடர்ந்து காற்று வெளியிடை பட BGM ஒலிக்க DJ இடமிருந்து மைக்கை வாங்கிய அஞ்சலி மேடைக்கு முன் வந்து BGM இற்கேற்ப பாடியவாறு ஆடத் தொடங்கினாள்.தொடர்ந்து மற்ற தோழர் தோழிகளும் மேடைக்கு முன் வர, அனைவர் முகத்திலும் புன்னகை படர கைத்தட்டல்களுடன் மெஹேந்தி பங்ஷன் இனிதே ஆரம்பமானது.

நான் தொலைத்த நாட்களெல்லாம் மறுபடியும் மலருமா..!! (On hold )Onde histórias criam vida. Descubra agora