❤ 03 ❤

238 24 14
                                    

பல வருடங்கள் கழித்து சந்தித்துக் கொண்ட இருவரின் மனதிலும் மாறுபட்ட உணர்ச்சிகள்.29 வயதில்..ஆறடி உயரம்..ஜிம் செய்து வலிமை பெற்ற உடம்பு..ட்ரிம் செய்யப்பட்ட தாடி..டெனிம் மற்றும் கரு நீல முழுக்கை ஷேர்ட் அணிந்து மடித்து விடப்பட்டிருக்க, அதிலிருந்து வெளிப்பட்ட முறுக்கேறிய புஜங்கள் என சஜீவ்வை ஆணழகனாகவே காட்டியது.தன்னை மறந்து அவனை நித்யாவின் காதல் கொண்ட மனம் இரசித்துக்கொண்டிருக்க பட்டென அவள் மூளை எச்சரிக்கை மணி அடித்தது.இத்தனை வருடமும் கடினப்பட்டு மறக்க முயற்சி செய்த சம்பவங்கள் அவள் முன் நிழலாடின.அவள் செவிகளில்,"எனக்கும் உனக்கும் எப்போதுமே செட் ஆகல நித்யா..இப்படி ஒரு லைப் எனக்கு வேணாம்..என்னோட அம்மாவோட பேச்சை என்னால தட்ட முடியாது..அவங்களை கஷ்டப்படுத்தி கிடைக்கிற எதுவும் எனக்கு அவசியமில்லை..இத்தோட எல்லாவற்றையும் முடிச்சிக்கலாம்..இனி நமக்குள்ள எதுவும் இல்ல..எந்த நிலைமையிலும் இனி என்னோட பேச முயற்சி பண்ணாதே...stay away from my life Miss.Nithya Yuvani..Bye.." என்ற வார்த்தைகளே ஒலித்தன.இதயத்தில் சுருக் என ஏதோ குத்தியது போல் உணர சட்டென அவனிடமிருந்து தன் பார்வையைப் பிரித்துக் கொண்டாள்.நித்யாவின் மாற்றத்தைக் கண்ட சஜீவ் தான் செய்த தவறின் பலன் தான் இது என மனதைத் தேற்றிக்கொண்டான்.அதற்குள் ஜனனி சித்தார்த் பற்றிய அறிமுகத்தை முடித்திருந்தாள். நித்யா,"ப்ரேம்ணா...ஆருண்ணா...எப்படி இருக்கீங்க 2 பேரும்..ஆமா இவர் யாரு.." என ஹரிஷை காட்டி கேட்க,"ப்ரீ..டாக்டர் மேடம்க்கு சும்மா இருக்க சொல்லு..அவங்க தான் இப்போ ரொம்ப பெரியவங்க ஆகிட்டாங்களே..இவ்வளவு நாள் இந்த பாசமெல்லாம் எங்க போச்சாம்..?" என்ற ஆரவ்வின் கோபமான பேச்சில் நித்யாவின் முகம் சுருங்கியது."அவன் கிடக்கிறான் விடு மா நித்தி..நாங்க நல்லா இருக்கோம்..நீ தான் ரொம்ப மாறிட்ட போல..அப்புறம் இவன் ஹரிஷ்..எப்ரோட்ல இருந்து கொஞ்சம் நாள் முன்னாடி தான் வந்தான்..அதனால தான் உனக்கு தெரியல..இவன பற்றி வேறு ஏதாச்சும் தெரியனும்னா நம்ம திவ்யா கிட்ட கேளு..." என கூறி ப்ரேம் சிரிக்க, திவ்யா, அண்ணா... என சினுங்கினாள். பிறகு ஒருவருக்கொருவர் நல விசாரிப்புகள் நடக்க ஆரவ்வும் சமாதானம் ஆகி இருந்தான்.இதற்கிடையில் ஹரிஷ் ப்ரேம் காதில்,"மச்சான் யுவனி நம்ம எல்லோருக் கூடவும் நல்லா பேசுறா..பழகுறா..பட் நம்ம சர்வேஷ கண்டுக்க கூட மாட்டேங்குறா..அவனும் மூஞ்ச தொங்கப் போட்டுட்டு இருக்கான்..ஆரவ் வேற அவ கூட ரொம்ப உரிமையா சண்டை போடுறான்..என்னடா மச்சான் நடக்குது இங்க..." என கிசுகிசுக்க,"ஹரி..நீ இங்க இல்லாத இந்த கொஞ்சம் வருஷத்துக்குள்ள இங்க என்னென்னவோ நடந்துச்சி..நான் அப்புறம் எல்லாம் விளக்கமா சொல்லுறேன்.." என பதிலளித்தான் ப்ரேம்.இங்கு நம் நாயகனோ தன்னவள் தன்னிடம் ஒரு வார்த்தையாவது பேச மாட்டாளா என ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான்.ஆனால் நித்யாவோ மறந்தும் அவன் பக்கம் திரும்பவில்லை.தன்னை யாரோ உற்று நோக்கிக் கொண்டிருக்க அது யாரென புரிந்தும் சாதாரணமாக இருக்க போராடிய நித்யாவின் முயற்சி தோல்வியில் முடிய,"சரி நீங்க எல்லோரும் இருங்க..நான் உள்ள போய் அப்பா,அம்மா கூட பேசிட்டு வரேன்..சித்து வா போலாம்.." என யார் பதிலுக்கும் இடமின்றி சித்தார்த்தின் கரம் பற்றி உள்ளே அழைத்துச் சென்றாள் நித்யா. இவர்களுக்கு இடையிலுள்ள உரிமையான பேச்சை கவனித்த அனைவரும் இருவருக்குள்ளும் இருப்பது எந்த மாதிரியான உறவு என குழம்பிப்போய் விழிக்க, சஜீவ்விற்கு மட்டும் ஏனோ சித்தார்த்தின் மீது காரணம் அறியா வெறுப்பு தோன்றியது.

நான் தொலைத்த நாட்களெல்லாம் மறுபடியும் மலருமா..!! (On hold )Where stories live. Discover now