அனிச்சம் பூ 2

6K 117 21
                                    

         ன்டர்வியூவை முடித்துவிட்டு தீப்தியும் ஜீவிகாவும் ரெஸ்டாரன்டில் ஆர்டர் செய்துவிட்டுக் காத்திருந்தனர்,

ஜீவிகாவின் மனம் ஏனோ இங்கும் அவன் முகத்தைத் தேடியது , மனதை ஒரு நிலைப் படுத்த எண்ணியவாறு, இன்டர்வியூவைப் பற்றி மீண்டும், விசாரித்துக் கொண்டிருந்தாள். அதற்குள் குளிர்பானங்கள் வந்திருந்தது , இருவரும் பேசிக்கொண்டே குளிர்பானங்களைப் பருகினர்,

ஜீவிகா நிமிர்ந்தபோது இங்கும்
அவன் முகம்... இப்பொழுது அவன் பார்வை  வெகு இயல்பாய் ஜீவிகாவைத் தொட்டுக் கடந்தது . ஆனால் கணநேரத்தில் கடந்துவிட்ட அவன் கண்களை நேராகச் சந்தித்த ஜீவிகாவிற்கு ,

இருமடங்கு வேகமாய்த் துடித்த இதயம், தன் நான்கு அறைகளுக்கும் பாலம் அமைத்து அதி வேக இரயில்ளை இயக்கித் தடதடத்துக் கொண்டிருந்தது .

அவனது முதல் பார்வையில் , ஒட்டுமொத்த பரவசமும் ஒற்றைப்புள்ளியில் சேர்ந்து கூராகி , அவள் மனதில் நேராக இறங்கியது , இப்பொழுது ஜீவிகா மீண்டும் தலையை நிமிர்த்தி அவன் இருக்கும் திசையை நோக்கினாள், அவன் அலைபேசியில் யாருடனோ தொலைபேசத் தொடங்கி இருந்தான், அவளையும் மீறி அவள் இதழில் ஒரு கால் வட்டக் குறும் புன்னகை குடிகொண்டது ..

இவளுக்குள் நடக்கும் பிரளயம் பற்றி அறியாத தீப்தி என்னும் ஜீவன் அந்த பட்டர்ஸ்காட்ச் மில்க் ஷேக்கை அதி சிரத்தையாகச் சுவைத்து முடித்துக் கிளம்ப ஆயத்தமாகி, " போகலாமா ? " என்று தன் அழகிய விழிகளால் வினவ , தன் தோழியின் விழியசைவைப் புரிந்து கொள்ளும் ஒத்திசைவில் ஜீவிகா இல்லை.

" என்ன ? " என்று பதிலுக்கு வினவினாள்.

" போலமான்னு கேட்டேன் " என்றாள் தீப்தி .

" ஹிம் .. போகலாம் " என்றது இதழ்கள் .
'இங்கேயே இருக்கலாம் ' என்றது இதயம் .
இதயம் பேசுவதையெல்லாம் மூளை மதிக்காதே! தீப்தியும் ஜீவிகாவும் ரெஸ்டாரண்டை விட்டுக் கிளம்பினர்.

அனிச்சம் பூவே.. அழகிய தீவே.. ( Completed )Where stories live. Discover now