அனிச்சம் பூ 53

2.3K 100 71
                                    

செந்து மீண்டும் ஆரம்பித்தான் , நான் ஏன் மா ரஷ்மியை மறக்கனும் ? ... அவ என்மேல வச்ச காதல் உண்மையானதுதான் அதை எந்த நாளும் நான் மறக்கவோ மறுக்கவோ மட்டேன் , ஆனா அவளோட காதலுக்கு நான் தான் தகுதி இல்லாதவன் மா , யாரவது நம்மை மதிச்சு அன்பா இரண்டு வார்த்தை பேசி எதாவது உதவி பண்ணிட்டா , அவங்களுக்கு எப்போ திரும்ப உதவலாம்னு எதிர்பார்த்து ஞாபகம் வச்சிருப்போம் , ஆனா ரஷ்மி அவளுடைய வாழ்கையையே என்னோடு வாழ ஆசைப்பட்டவள் , அவளை எப்படி மா மறக்கமுடிறயும் ? ... என்றவனின் குரல் தவிப்பு இழையோட மேலும் தொடர்நதான்..

ரஷ்மியால கனவுல கூட எப்போதும் யாருக்கும் தீங்கு செய்ய முடியாது மா .. அதேபோலத்தான் அவளுடைய நினைவுகளும் ... என் மனதில் இருக்கும் ரஷ்மியோட நினைவுகளால யாருக்கும் எந்த தீங்கும் வராது மா ... குறிப்பா நான் உயிரா நினைக்கிற ஜீவிக்கு , நான் ஜீவியோடு சேர்நது சந்தோஷமா வாழ்வேன் மா ஆனா அதுக்கு எனக்கு கொஞ்சம் டைம் வேண்டும் , என்னை தயவு செஞ்சு புரிஞ்சுக்குங்க மா .. எனக் கூற ...

ஜெயந்தியின் அதிர்ச்சி இப்போது நிம்மதியாக மாறி இருந்தது ... மகனின் கரங்களைப் பிடித்தவள் , சாரி செந்து நீ எங்கே ரஷ்மியை நினைச்சுகிட்டு ஜீவியைத் தவிக்க விட்டிருவியோன்னு பயத்தில் தான் அப்படி சொன்னேன் செந்து , மத்தபடி ரஷ்மி மேல எனக்கு எந்த வருத்தமும் இல்லை ..

நீ ரஷ்மியைப் பற்றி சொன்னது சரிதான் செந்து , நான் ரஷ்மிய பொண்ணு பார்க்கக் கிளம்பும் போது கூட , எனக்கு அதில் பெரிசா உடன்பாடில்லை , ஆனா அவளைப் பார்த்தபிறகு தான் அவளுடைய மனசு எனக்குப் புரிஞ்சது , அம்மா இல்லாம , ஒரு பொண்ணு வளர்வது எவ்வளவு கஷ்டம்ங்கறத நான் அனுபவிச்சிருக்கேன் செந்து , என் நிலமையில் தான் அவளும் இருந்தாள் , இந்த திருமணத்திற்குப் பிறகு அவள் வாழ்கையில் இனி சந்தோஷம் மட்டுமே இருக்கனும் நினைச்சேன் , அவ மனசு நோகவிடாம பார்த்துக்கனும்னு நினைச்சிருந்தேன் ... அவ கல்யாணம் வேணாம்னு சொன்ன பொழுது அவ நிலைமை யாருக்கு புரிஞ்சதோ இல்லையோ எனக்கு நல்லா புரிஞ்சது செந்து , அதே நிலைமைய நானும் அனுபவிச்சிருக்கேன் எனக்கு கல்யாணம் ஆகும் போது பாலா செவன்த் தான் படிச்சிட்டு இருந்தான் , அவனை விட்டுட்டு கல்யாணம் பண்ணிவந்துட்டமே , அவன் சாப்பிட்டானா , படிச்சானா , தூங்கிணானா? , அப்பா பிஸ்னஸையே பார்த்துட்டு உடம்ப கெடுத்துக்குவாரோ , டைம்கு சாப்பிட்டாரா ? இல்லையான்னு , தினம் தினம் வீட்டு ஞாபகமா இருக்கும் , எத்தனை வேலைக்காரர்கள் இருந்தாலும் , நம்ம பக்கத்தில் இருந்து கவனிக்கிற மாதிரி இருக்காதுல்ல ..கிட்டத்தட்ட அந்த நிலைமைலதான் ரஷ்மியும் இருந்தா ,
அந்த ஆக்ஸிடன்ட்ல அவங்க அக்காவுக்கும் மாமாவுக்கும் ஏதாவது ஒன்னுன்னா அவங்களோட , இரண்டு சின்ன குழந்தைகள் , கம்பணி , அவங்க அப்பான்னு அனைத்தையும் விட்டுட்டு வா ன்னு சொன்னா எப்படி முடியும் சொல்லு ? ..
அதனால்தான் நான் ரஷ்மியிடம் உன்னோடு நாங்க எல்லோரும் உனக்கு துணையா இருக்கோம் , நீ வந்து செந்து கையால தாலி மட்டும் கட்டிக்கன்னு , என் மனசிலருந்துதான் சொன்னேன் ஆனா அவ என்னை நம்பல செந்து .... ஆனா அன்றைக்கு கல்யாணத்தை நிறுத்தி , ரஷ்மிக்காக வெயிட் பண்ணாம , ஏதோ தப்பு பண்ணீட்டமோன்னு இப்பவும் என் மனசுல அடிக்கடி ஒரு குற்ற உண்ர்ச்சி வநது எட்டிப் பார்க்கும் , ... என்று பார்வையை எங்கோ பதித்துக் கண்கலங்கிய ஜெயந்தியின் கரம் பிடித்து சரி விடுங்கம்மா , பார்த்துக்கலாம் என்று கூறிய செந்துவின் கண்களும் நீர் தேக்கியே வைத்திருந்தது ....

அனிச்சம் பூவே.. அழகிய தீவே.. ( Completed )Where stories live. Discover now