வாழ்த்துப்பாக்கள்

184 4 2
                                    

ஒண்பது திங்கள் உதரத்தில்

.....ஓய்வெடுக் காது சுமந்தவளே

மண்ணில் தவழும் போதினிலும்

.....மறந்தி டாமல் காத்தவளே

கண்ணைக் காக்கும் இமைபோல

.....கருத்தாய் எம்மை வளர்த்தவளே

பெண்மைத் திருவே பெரியவளே

.....பிறந்த நாள்நல் வாழ்த்தம்மா...


உதிரம் பாலாய் ஊட்டினையே

.....உழைப்பைச் சோறாய்ப் புகட்டினையே

மதிக்கும் கல்வி எனுமருந்தை

.....மட்டில் லாமல் கொடுத்தனையே

விதிக்கும் வேலி போட்டனையே

.....விருப்பம் எல்லாம் சேர்த்தனையே

மதிப்பறி யாமல் மடமையில்யாம்

.....வதைக்கும் போதும் பொறுத்தனையே...


மழலை பேசும் வயதுமுதல்

.....மமதை பேசும் வயதுவரை

குழந்தை என்றே எமைக்கருதிக்

.....குழையும் நேசம் குவிந்தவளே

அழகே அருளே எம்மன்னாய்

.....அழலாய் ஆடும் அரவணியான்

கழலே நினைந்து வாழ்த்துகிறோம்

.....கவினுற பலகால் வாழ்வாழ்நீ!

(முற்றும். நன்றி.)

(அடுத்த பகுதியில் சில கடினமான சொற்களுக்குப் பொருள் தந்துள்ளேன். தேவை என்றால் பார்க்கவும்...)

அம்மாவிற்குப் பிறந்தநாள் வாழ்த்து (கவிதை)Where stories live. Discover now