மூவரும் தாங்கள் தீட்டிய திட்டத்தை மறந்து.. தங்களை விட்டா போதும்.. என்ற நிலைக்கு வந்திருந்தனர்.

கல்யாணத்திற்கு முந்தைய நாள்..

கையில் மெஹந்தி வைத்துக் கொண்டிருந்த மித்ரா.. எல்லாரும் அங்கே இருக்க ஆதி மட்டும் மொட்டை மாடிக்கு செல்வதை கவனித்தாள்.

யாரும் கவனிக்காத நேரத்தில் அவளும் ஆதியை பார்க்க சென்றாள்.

"என்ன தனியா இங்க வந்து நிக்கிறீங்க.."என்ற மித்ராவின் குரல் கேட்டு திரும்பினான் ஆதி.

"ஒன்னுமில்லை.."என்று அவள் முகம் பார்க்க.. மித்ராவோ அவன் முகவாட்டத்தை கவனித்தாள்.

"என்னாச்சு.."என சற்று பதற்றமாக கேட்டாள் மித்ரா.

"அப்பா அம்மா நியாபகமாவே இருக்கு.. அதான் தனியா வந்துட்டேன்.."என்றான் ஆதி.

மித்ரா எதுவும் பேசாமல் அவன் சொல்வதை கேட்டுக் கொண்டிருந்தாள்.

"அம்மாவும் அப்பாவும் இப்ப இருந்திருந்தா ரொம்ப சந்தோஷமா இருந்திருப்பாங்க.. அம்மா ரொம்ப சந்தோஷமா இருந்தா குழந்தை மாதிரி நடந்துப்பாங்க.. எல்லா வேலையும் சீக்கிரமா முடிச்சிடணும்னு சுத்திட்டே வருவாங்க..

அப்பா தான் மதிமா கொஞ்சம் பொறுமையா இருன்னு.. அவங்கள சமாளிக்க படாதபாடு படுவாங்க.."என பேசிக் கொண்டிருந்த ஆதி சட்டென தன் பேச்சை நிறுத்தினான்.

"மித்ராவுக்கும் அப்பா அம்மாவை நியாபகப்படுத்திட்டேனே.. அவளுக்கும் கஷ்டமா இருக்குமே.."என மனதுக்குள் பதறியவன் மித்ராவின் முகம் பார்க்க.. அவள் சிரிப்புடன் ஆதியை பார்த்துக் கொண்டிருந்தாள்.

"சாரி மித்ரா.."என்றான் ஆதி.

"எதுக்கு.."என்றாள் மித்ரா புன்னகையுடன்.

"அ.. அது.. அப்பா அம்மாவை நியாபகப்படுத்திட்டேனா.."என தயக்கமாக மித்ராவை பார்த்தான் ஆதி.

இல்லையென தலையசைத்தாள் மித்ரா.

இருந்தும் தன் தயக்கம் நீங்காமல் ஆதி மித்ராவை பார்க்க.. "அதான் எல்லாமுமா நீங்க என்கூடவே இருக்கீங்களே.."என்றாள் மித்ரா.

தொடுவானம்Where stories live. Discover now