யாழினியும் கௌதமும்.. "டாக்டர் சார்.. கேக் கட் பண்ணுங்க.."என கேக் எடுத்து வந்தனர்.

கார்த்தி கேக் கட் செய்து.. மித்ராவுக்கு முதலில் ஊட்டிவிட்டான். மித்ராவும் கார்த்திக்கு ஊட்டிவிட்டாள்.

யாழினியும் கௌதமும் கேக் எடுத்து கார்த்தியின் முகத்தில் பூசிவிட்டனர். ஒருவருக்கொருவர் மாற்றி மாற்றி க்ரீமை பூசிவிட்டு சந்தோஷத்தில் சிரித்துக் கொண்டிருந்தனர்.

முகமெல்லாம் க்ரீமை பூசிக் கொண்டு.. எல்லோரும் சிரித்துக் கொண்டிருக்க.. தூக்கம் கலைந்து வந்த ஸ்வேதாவும் சந்திரமதியும் சலித்தபடி மீண்டும் அறைக்குள்ளே சென்றனர்.

மாலதியும் ரவிச்சந்திரனும் வந்து தங்கள் வாழ்த்துக்களை கார்த்திக்கு தெரிவித்தனர்.

"விளையாட்டு லாம் போதும்.. போய் தூங்குங்க.. எல்லாரும்.."என ரவிச்சந்திரன் சொல்லிவிட்டு சென்றார்.

அவர்கள் சென்றும் நெடுநேரம் எல்லாரும் சந்தோஷமாக பேசிக் கொண்டும்.. விளையாடிக் கொண்டும் இருந்துவிட்டு படுக்கச் சென்றனர்.

ஆதியும் மித்ராவும் காலையில் கார்த்திக்கென வாங்கிய புது உடையை அவனிடம் கொடுத்தனர். கார்த்தியும் மகிழ்ச்சியோடு அதை அணிந்து கொண்டான்.

ஆதியும் மித்ராவும் கார்த்தியை அழைத்துக் கொண்டு கோவிலுக்கு சென்றனர். கார்த்தியின் பேரில் அர்ச்சனை செய்து விட்டு வந்தனர்.

மாலதி.. கார்த்திக்கு பிடித்த உணவுகளை சமைத்திருக்க.. எல்லோரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டனர்.

கௌதமும் யாழினியும் கார்த்திக்கு தங்க மோதிரம் ஒன்றை பரிசளித்தனர். மாலதியும் ரவிச்சந்திரனும் பிரேஸ்லெட் ஒன்றை பரிசாக கொடுத்தனர்.

ஆதியும் மித்ராவும்.. கார்த்திக்கு தங்கச் செயின் ஒன்றை பரிசளித்தனர்.

ஆதி கார்த்தியிடம்.. "நீ எங்கலாம் போகணும்னு ஆசைப்படுறீயோ.. அங்கலாம் போகலாம்.."என்றான்.

தொடுவானம்Where stories live. Discover now