"ஆமா.."என்றபடி அதை வாங்குவதை போல.. கையை நீட்டிய ஸ்வேதா வேண்டுமென்றே தவறவிட்டாள் அதை.

அதை கவனித்த கார்த்தியும் மித்ராவும் கீழே விழுந்துவிடும் என்றே நினைத்தனர்.

ஆனால் ஆதி வாட்ச் கீழே விழாமல் பிடித்துவிட்டான்.

"என்ன ஸ்வேதா.. கவனமா வாங்க மாட்டீயா.."என லேசான கோபத்துடன் கேட்டான் ஆதி.

"சாரி அத்தான்.. நான்.."என சமாளிக்க நினைத்தாள் ஸ்வேதா.

ஆதி கார்த்தியிடம் வாட்ச்சை கொடுக்க.. அதை வாங்கிக் கொண்ட கார்த்தி.. "எங்க அவங்க கீழ போட்ருவாங்களோனு பயந்துட்டேன்.."என கண் கலங்கினான்.

"இதுக்கு ஏன் கண் கலங்குற.. விடு.. ஒன்னுமில்லை.."என ஆதி சமாதானம் சொன்னான்.

"இல்லை.. நீங்க முத முதல்ல தந்த கிப்ட் அதான்.."என கார்த்தி சொன்னான்.

"உனக்கு வேணும்னா இன்னும் எவ்ளோனாலும் வாங்கித் தருவேன் டா.. இதுக்கு லாம் கண் கலங்காத.."என்றான் ஆதி.

கார்த்தி சரியென தலையசைத்தான். ஆதி கார்த்தி மீது காட்டும் பாசத்தைக் கண்டு மித்ரா சந்தோஷம் கொண்டாள்.

யாழினி கல்யாணத்திற்காக.. எல்லோருக்கும் வாங்குவதற்காக பட்டுப்புடவைகளை வீட்டுக்கே வரவைத்திருந்தான் ஆதி.

மாலதியும் யாழினியும் ஒருபுறம் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தனர். ரவிச்சந்திரனும் அவர்களோடு இருந்தார்.

மித்ராவோடு ஆதி அமர்ந்திருந்தான். மித்ரா ஒரு புடவையை எடுத்து.. ஆதியிடம் காட்டி ஏதோ சொல்லிக் கொண்டிருந்தாள்.

ஆதியும் மித்ராவிடம் சிரித்து பேசிக் கொண்டிருக்க.. எதாவது செய்ய வேண்டும் என வெறுப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள் ஸ்வேதா.

அருகில் இருந்த காபி கப்பை கையில் எடுத்துக் கொண்டு மித்ராவின் அருகில் வந்தாள்.

மித்ராவும் ஆதியும் அவளை கவனிக்காமல் தங்கள் பேச்சில் மும்மரமாக இருந்தனர்.

தொடுவானம்Where stories live. Discover now