தான் நினைத்தது நடக்காத வருத்தத்தில் சந்திரமதி ஆதியை பார்க்க. ஸ்வேதா.. ஆதியை முறைத்தபடி நின்று கொண்டிருந்தாள்.

போனில் கார்த்தி சொன்ன "அக்கா வேலைக்கு போய்ட்டு வந்து ரூமுக்குள்ள போய் கதவை பூட்டினா.. நான் கூப்டிட்டே இருக்கேன்.. அக்கா எதுவும் பேசவும் மாட்டிக்குறா.. கதவையும் திறக்க மாட்டிக்குறா.. எனக்கு ரொம்ப பயமா இருக்கு.."என்ற வார்த்தைகள் மட்டும் மனதில் இருக்க காரை வேகமாக செலுத்தினான் ஆதி.

"அக்கா.. அக்கா.."என அழைத்தபடி.. கதவை தட்டிக் கொண்டிருந்தான் கார்த்தி.

ஆதியும்.. பதற்றத்துடன் வந்து.. "மித்ரா.. மித்ரா.."என அழைத்தான்.

எந்த பதிலும் வராததால் கதவை உடைக்கலாம் என ஆதி நினைத்த வேளை.. கதவை திறந்தாள் மித்ரா.

"எதுக்கு இப்டி பண்ணிட்டு இருக்க.. என்னாச்சு.. உனக்கு.."என ஆதி கோபத்துடன் கேட்க.. சோர்வாக.. சிவந்து போயிருந்த கண்களுடன்.. மித்ரா.. ஆதியை பார்த்தாள்.

நிற்க பலமில்லாமல் மித்ரா மயங்கி விழுந்தாள். ஆதி நடப்பது அறியாது உறைந்து நிற்க..  கார்த்தி.. "அக்கா.. அக்கா.." என பதறியபடி மித்ராவை தொட.. அவள் உடம்பெல்லாம் நெருப்பாக கொதித்தது.

"அக்காவுக்கு ரொம்ப காய்ச்சல் அடிக்குது.."என்றான் கார்த்தி.

சில நொடிகளில் சுதாரித்துக் கொண்ட ஆதி.. மித்ராவை ஹாஸ்பிட்டலுக்கு தூக்கிச் சென்றான்.

கார்த்தி அழுது கொண்டேயிருக்க.. அவனுக்கு சமாதானம் சொன்னான் ஆதி.

சில நிமிடங்களுக்கு பிறகு டாக்டர் வர.. "டாக்டர் மித்ரா எப்டி இருக்கா.."என ஆதி கேட்டான்..

"Fever ரொம்ப அதிகமா இருக்கு.. ரொம்ப நேரம் குளிந்த தண்ணியில இருந்தாங்களா.."என டாக்டர் கேட்டார்.

"ரொம்ப நேரமா ஷவர் சத்தம் கேட்டுட்டே இருந்துச்சு.."என கார்த்தி பதற்றத்துடன் சொன்னான்.

"அதனால கூட இருக்கலாம்.. இன்ஜெக்சன் போட்ருக்கேன்.. கொஞ்ச நேரம் கழிச்சு டெம்பரேச்சர் குறைஞ்சிருக்கானு பார்க்கலாம்.."என்று சொல்லிவிட்டு டாக்டர் சென்றார்.

தொடுவானம்Where stories live. Discover now