ஒருவழியாக கார்த்தி கொலுசை தேர்வு செய்து முடிக்கவும்.. ஆதியும் மித்ராவும் மோதிரத்தை அலசி ஆராயத் தொடங்கினர்.

"இது எனக்கு பிடிச்சிருக்கு.. இத வாங்குவோமா.."என மித்ரா ஆதியிடம் கேட்டாள்.

"ம்.."என்றான் ஆதி.

மித்ரா கார்த்தியிடமும் காட்டினாள். "நல்லாருக்கு.."என கார்த்தியும் சொன்னான்.

ஆதி மற்ற மோதிரங்களை பார்த்துக் கொண்டிருக்க.. மித்ரா ஆதியிடம்.. "உங்களுக்கு வேற மோதிரம் பிடிச்சிருக்கா.."என கேட்டாள்.

ஆதி மித்ராவை திரும்பி பார்த்து.. "மித்ரா.. நம்ம என்கேஜ்மென்ட்க்கு மோதிரம் வாங்கிக்கலாமா.."என கேட்டான்.

"ம்.. வாங்கிக்கலாம்.. எப்ப என்கேஜ்மென்ட்.."என மித்ரா சிரிப்புடன் கேட்டாள்.

"ம்.. இன்னைக்கு.."என ஆதி பதிலளித்தான்.

"என்ன இன்னைக்கா.."என மித்ரா சற்று அதிர்ச்சியுடன் அவனை பார்த்தாள்.

"எல்லாரையும் கூப்பிட வேணாமா.."என கார்த்தி கேட்டான்.

"யாரை கூப்பிடணும்.. அதான் ஒரே சொந்தம் நீ இருக்கிறல்ல.."என அவன் தலைவருடியபடி ஆதி சொன்னான்.

ஆதி சொல்வது சரிதான் என மித்ராவுக்கு தோன்றினாலும்.. "உங்க சொந்தக்காரங்களுக்கு சொல்ல வேண்டாமா.."என மித்ரா கேட்டாள்.

"வேண்டாம்.. கல்யாணம் பண்ணும் போது.. ஊரையே கூப்பிடலாம்.. இப்ப நம்ம சந்தோஷத்துக்காக மோதிரம் மாத்திக்கலாம்.."என ஆதி சொன்னான்.

மித்ரா சரியென தலையசைத்தாள். கார்த்தியும் சந்தோஷமாக இருக்க.. ஆதியே இருவருக்குமான மோதிரத்தை தேர்வு செய்தான்.

"இது பிடிச்சிருக்கா.."என ஆதி மித்ராவிடம் கேட்க.. மித்ராவும்.. "ம்.. பிடிச்சிருக்கு.."என்றாள்.

"எல்லாத்தையும் ஒரே பில்லா போடுங்க.."என்றான் ஆதி.

"அதுக்கு என்கிட்ட காசு இருக்கு.."என்றாள் மித்ரா.

"அது உன்கிட்டயே இருக்கட்டும்.. கார்த்தியோட படிப்பு செலவுக்கு வச்சுக்கோ.."என்றான் ஆதி.

தொடுவானம்Kde žijí příběhy. Začni objevovat