ஆதி தன் விரல்களை மித்ராவின் விரல்களோடு கோர்த்துக் கொண்டான்.

மித்ரா புன்னகையோடு ஆதியின் தோளில் சாய்ந்திருந்தாள்.

நிலவொளியில்.. எதுவும் பேசாமல் அமைதியாக.. சந்தோஷமாக இருந்தனர் மித்ராவும் ஆதியும்.

சில நிமிடங்கள் கடந்தபின்.. "ஆதி.. நான் போகவா.." என்றாள் மித்ரா.

செல்லமாக அவளை முறைத்தான் ஆதி..
"சாரு தேடுவா.."என கெஞ்சலாக மித்ரா சொன்னாள்.

"இரண்டு நாளா என்னை தூங்கவிடாம பண்ணதுக்கு.. பனிஷ்மென்ட்.. என்கூடவே இரு.."என்றான் ஆதி.

"ஆதி.."என சிணுங்கினாள் மித்ரா.

"நான் கொஞ்ச நேரம் தூங்கிக்கிறேன்.. செல்லம்ல.."என அவள் கன்னத்தை கிள்ளிவிட்டு.. மித்ரா மடியிலே படுத்துக் கொண்டான் ஆதி.

மித்ராவும் ஆதியின் செய்கையை கண்டு சிரித்தபடி இருந்தாள்.

நெடுநேரமாக மித்ரா வராததால்.. என்னதான் பண்றா.. என மாடிக்கு வந்தாள் சாரு.

சாரு வந்ததை கவனிக்காமல் மித்ராவும் ஆதியும் பேசிக்கொண்டிருந்தனர்.

"ஆதி.."என்றாள் மித்ரா.

ஆதி மித்ராவின் மடியில் கண்களை மூடி படுத்திருந்த படியே.. "ம்.."என்றான்.

"நான் உங்களை பர்ஸ்ட் டைம்.. கடையில பார்த்தேன்ல.."

"ம்.."

"அதுக்கப்புறம் ஒரு நாள் எனக்கு ஒரு கனவு வந்துச்சு.."என மித்ரா சொல்லவும் ஆர்வமாக.. "என்ன கனவு.."என்றான் ஆதி.

"அது.. அது.. நீங்க இதே மாதிரி என் மடியில படுத்திருக்கிற மாதிரி.."என மித்ரா சொன்னாள்.

"ம்.. கனவு நிஜமாயிடுச்சுல்ல.."என்றான் ஆதி புன்னகையோடு..

அப்போது சாரு.. "கனவே எனக்கு இன்னும் தெரியாது.. அதுக்குள்ள அது நனவாயிடுச்சா.."என சொல்ல.. அவள் வந்ததையே ஆதியும் மித்ராவும் அப்போது தான் கவனித்தனர்.

அவள் சத்தம் கேட்டதும் தான் ஆதியும் மித்ராவும் தங்கள் உலகத்திலிருந்து மீண்டு வந்தனர்.

ஆதியும் மித்ராவும் எழுந்திருக்க.. "மித்ரா நீ இங்க.. வா.. எப்ப வந்துச்சு இந்த கனவு.. இதை ஏன் என்கிட்ட சொல்லலை.."என்றாள்.

"அது.. அது.."என மித்ரா திணற..

"அவரை பார்க்கணும்னு வந்த.. இங்க வந்து பார்த்தா.. மடியில படுக்க வச்சு கொஞ்சிட்டு இருக்க.. உன்னை என்ன பண்றேன் பாரு.."என சாரு சொன்னாள்.

மித்ரா ஆதியின் கைகளை பிடித்தபடி.. அவன் பின்னால் நகர.. "ஆங்.. அண்ணா பின்னாடி ஒளிஞ்சா மட்டும் விட்ருவேனா.. அண்ணா நீங்க நகருங்க.."என சாரு மித்ராவோடு விளையாட.. ஆதி அவர்களை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான்.

சந்தோஷத்திலே நெடுநேரம் தூக்கம் தொலைத்தனர் மித்ராவும் ஆதியும்..

தொடுவானம்Where stories live. Discover now