மித்ராவின் நினைவிலிருந்த ஆதியின் அறைக்குள் நுழைந்தான் சதீஷ்.

"பாஸ்.. அவங்க பேர் மித்ரா.. ஒரு தம்பி மட்டும் தான்.. தம்பியை டாக்டராக்கணுங்கிறது தான் அவங்க ஆசை.. அன்னைக்கு இங்க மீட்டிங் வந்தப்ப தான் அவங்க அப்பா நெஞ்சுவலியால இறந்துட்டாங்க..

கவின் eventsல ஒரு வருஷமா வேலை பார்க்கிறாங்க.. கவின் சார் தான் இங்க அவங்க தங்குறதுக்கு வீடு பார்த்துக் கொடுத்திருக்காரு.. அவங்க ப்ரெண்ட் சாரு.. அவங்க தம்பி கார்த்தியோட அந்த வீட்டில தங்கியிருக்காங்க பாஸ்..

நம்மளோட event full planning மித்ரா மேடம் தான் பாஸ்.."என சதீஷ் தான் சேகரித்த விவரங்களை சொன்னான்.

சதீஷ் சொன்ன எல்லாவற்றையும் கேட்டுக் கொண்ட ஆதி.. "சரி.. இப்ப மித்ரா எங்க இருக்கா.." என கேட்டான்.

"செகண்ட் ப்ளோர்ல.. பாஸ்.."

"ஓகே.. நீ போய் உன் வேலையை பாரு.. என்னை டிஸ்டர்ப் பண்ணாத.."என்றபடி அங்கிருந்து வெளியேறினான் ஆதி.

"ஓகே பாஸ்.."என்ற சதீஷ் ஏதோ நினைவு வந்தவனாக.. "பாஸ்.. பாஸ்.. மீட்டிங்.."என சொல்லத் தொடங்கிய வேளை.. ஆதி மித்ராவை கண்ணிமைக்காமல் பார்த்தபடி இருந்தான்.

மித்ரா ஆதி நின்றதை கவனிக்கவில்லை.. தன் வேலைகளை பார்த்தபடி இருந்தாள்.

"அண்ணா.. இந்த டெக்கரேஷன் வெளியே entranceல.. அது இருக்கட்டும்.. நீங்க இங்க பர்ஸ்ட் முடிச்சிடுங்க.."என மித்ரா பேசிக்கொண்டிருக்க.. அவளையே பார்த்து ரசித்தபடி நின்றிருந்தான் ஆதி.

மித்ரா அங்கிருந்த ஒரு சேரில் உட்கார்ந்தாள். எதேச்சையாக திரும்ப.. அங்கே ஆதி நின்று கொண்டிருந்தான்.

மித்ரா ஆதியை பார்த்து.. மெலிதாய் புன்னகைத்தாள். ஆதியோ பதிலாக ஈஈஈ என பல்லைக் காட்டினான்.

மித்ராவின் போன் ரிங்க் ஆனது.. சாரு தான் அழைத்திருந்தாள்.

மித்ரா போனை அட்டெண் செய்ததும்..

"மித்ரா உன் lunch box எங்க.."என சாரு கோபமாக கேட்டாள்.

அப்போது தான் மித்ராவுக்கு lunch boxஐ மறந்தது நினைவுக்கு வந்தது.

"சாரி.. சாரு.. மறந்துட்டேன்.."என மித்ரா மன்னிப்பு கேட்டாள்.

ஆனால் சாருவின் கோபம் குறையவில்லை. அதை உணர்ந்த மித்ரா.. "சாரு.. நான் கண்டிப்பா சாப்பிடுறேன்.. வெளியே எங்கையாவது.." என சமாதானம் செய்ய முயன்றாள்.

"யாரு.. நீ.. வெளியே சாப்பிடுவ.. நான் நம்பிட்டேன்.."என சாரு சொன்னாள்.

"சாரு.. நிஜமாவே காலையில இருந்து நான் எதிலயும் கவனமில்லாம இருக்கேன்.. இன்னைக்கு ஒரு event arrangements பார்த்துக்க வந்தேன்.. ஒரு கார்ல மோதிருப்பேன்.."

"அச்சோ.. மித்ரா.. என்னாச்சு.. அந்தக் கார்க்காரன் கண்ணை எங்க வச்சிருந்தான்.. அவன் கவனமா வந்திருக்க வேண்டியது தான.."என சாரு போனில் திட்டிக் கொண்டிருக்க.. ஆதி மித்ராவிடம் பேசுவதற்காக அவளருகில் வந்து கொண்டிருந்தான்.

அதை கவனித்த மித்ரா.. "சாரு.. நான் அப்புறம் பேசுறேன்.."என்றபடி போனை கட் செய்தாள்.

ஆதி.. "சாரி.. உங்களை போன் பேசவிடாம பண்ணிட்டேனா.."என்றபடி மித்ராவுக்கு எதிரில் அமர்ந்தான்.

"அ.. அதெல்லாம் ஒன்னுமில்லை.."என்றாள் மித்ரா.

"நீங்க.. இங்க என்ன பண்றீங்க.."என கேட்டாள் மித்ரா.

"எங்க ஆபிஸ்க்கு வந்திருக்கீங்க.. நாங்க தான உங்களை நல்லபடியா கவனிச்சுக்கணும்.."என்றான் ஆதி.

"பரவாயில்லை.. நான் மேனேஜ் பண்ணிக்குவேன்.. நீங்க போங்க.. உங்க பாஸ் கோபப்படப் போறாரு.."என்றாள் மித்ரா.. ஆதி தான் அந்தக் கம்பெனியின் எம்.டி என்பதை அறியாமல்..

"பாஸா.."என்றான் ஆதி.

மித்ரா.. "ஆம்.. உங்க பாஸ் ரொம்ப கோபப்படுவார்னு சொன்னாங்க.." என சொல்ல ஆதிக்கு சிரிப்பு வந்தது.

ஆனால் ஆதி சிரிப்பை கட்டுப்படுத்தியபடி.. "எங்க பாஸ் தான் உங்களை கூடவே இருந்து பார்த்துக்க சொன்னாரு.."என்றான் ஆதி.

"ஓ.. அப்டியா.."என்றாள் மித்ரா.

அந்த நேரம்.. "பாஸ்.. பாஸ்.."என்றபடி சதீஷ் அங்கே வந்தான்.

#ஆதி யார் என்பதை மித்ரா அறிவாளா..

தொடுவானம்Where stories live. Discover now