கலைந்த கனவு

Start from the beginning
                                    

" அவ பேச மாட்டா.. நீ போய்டு அர்ஜுன்.. " அவள் சிநேகிதி தான் பேசினாள்,

" நீ மூடிட்டு போய்டு.. உனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமுமில்ல.. இது எங்க விஷயம்.. " அடக்கி வைத்திருந்த கோபம் வார்த்தைகளில் வெளிப்பட.. அதன் உஷ்ணம் தாங்காமல் உதடுகள் துடித்தன.

" நீ வாடி.. " இப்போது பேசினாள் ஜனனி, இவனை கண்டுகொள்ளாமல், தன் தோழியின் கைகளை இழுத்தவாறு இவனிடமிருந்து நகன்றாள். அதற்கு மேல் சினம் தாளவில்லை. நழுவிய அவள் கைகளை எட்டி பிடிக்க முயன்றான். வளையல் தான் சிக்கியது, கண்ணாடி வளையல்கள்... இவன் வேகத்தை தாளாமல் நொறுங்கின. அவளை கிழித்திருக்கும்.. இவனுக்கு வலித்தது.

" என்னம்மா.. பிரச்சனை.. யாரு இவன்.. " என்றது பெண்களுக்கு மட்டும் பாய்ந்து வரும் ஒரு நாப்பத்தைந்து வயது உதவிக்கரம்.

" தெரிஞ்சவங்க தான் .. நான் பாத்துக்கறேன் ." என்று உதவிக்கரத்தை வந்த பாதை அனுப்பியவள்,,

பின் இவனை நோக்கி, இவன் கண்ணை லாவகமாக தவிர்த்து..

" அர்ஜுன் உனக்கு என்ன வேணும்.. "

" என்ன வேணுமா.. என்ன நடக்குது.. " அவள் கையை விடுவித்தான். " என்ன ஆச்சு உனக்கு.. அவங்க சொல்றதெல்லாம் உண்மையா.. நீ.. நீ.. " வார்த்தைகள் வெளிவராமல் வதைக்கவே .. கைகளால் தொண்டையை பிடித்தான்.

" நீ.. என்ன தப்பா.. உன்ன.. அப்படி பண்ணுனேன்னு.. நீ சொல்லல தானே.. ப்ளிஸ் சொல்லு.. நீ.."

" உண்மை தான்.. நான் தான் சொன்னேன்.. வேறேதும் பேசாதீங்க.. என்ன மறந்திடுங்க.. "

அவள் விலகி நகலும் போது , உயிர் பிரிவது போல உணர்ந்தான். அவள் வார்த்தைகள் இவன் செவி விட்டு நகரவில்லை, மீண்டும் மீண்டும் ஒலித்து.. இவனை உருக்குலைத்துக் கொண்டிருந்தது. அனாதையாக தனித்து விடப்பட்டதை போல நிழலும் அண்ட மறுத்தது, துக்கம் தொண்டையை நெரித்தது. கண்கள் சூடாகின.. கண்ணீர் வெளிவர துடித்தது, கோவம் அதை தடுக்கவே அங்கிருந்து நகன்றான்.

காணும் ஒவ்வொருவரும் இவனை பார்த்து சிரிப்பதாக தோன்றியது. இவனை தவிர அனைவர் முகத்திலும் சந்தோசம்...
விறு விறுவென நகன்றான். தன் பைக்கை உதைத்து கிளப்பினான். கால்கள் கைகளின் செயல்பாடுகள் அன்னிச்சையாக மாறி போயின.

இறகாய் இரு இதயம்Where stories live. Discover now