கலைந்த கனவு

1.8K 76 106
                                    

கூட்ட நெரிசலில் சப்பானியாக சாய்ந்து வந்த அந்த அரசு பேருந்து, பஸ்டாண்டை அடைந்து உஷ்ஷ்ஷ்... என கடைசி மூச்சுடன் அணைந்து போகவும், பண்டத்தை மொய்க்கும் ஈ போல மக்கள் கூட்டம் அதனை மொய்த்தது. காலி இருக்கைகளை நோக்கி படையெடுத்த அந்த கூட்டத்தின் நடுவே, அவனின் கண்கள் பேருந்திலிருந்தவர்களை நோட்டமிட்டு கொண்டிருந்தன.

' இந்த பேருந்து தானா.. இது தான்..' அவன் கண்கள் ஒவ்வொரு ஆட்களையும் நோட்டமிட்டவாறே நகர்ந்து, ' எங்கே.. எங்கே.. அதோ.. அவளே தான்.. ' ஒரு பெண்ணிடம் தேடலை தொலைத்து நின்றது. வெள்ளை சுடிதார்.. அவன் முதலில் அவளை கண்ட பொது அணிந்த அதே நிறம். பின்ஜடை அவசரத்தில் அரை குறையாக நின்றிருந்தது. நெற்றியில் எப்போதும் போல நுண்ணிய கரும் பொட்டு. கொஞ்சம் கொஞ்சமாக ஆட்கள் இறங்க, கடைசியில் அவளும் வந்தாள்.

இருபுறமும் தோழிகள் காவலுடன், இவனை நெருங்கிய அவள், தற்செயலாக கூட பார்த்து விட கூடாதென, நேர் எதிர் திசையில் தலையை திருப்பியவாறு நகன்றாள். அந்த நொடி அவனுக்கு இவ்வுலகமே அன்னியமாக பட்டது. தன்னை சூழ்ந்த அனைவரும் தீண்டாமல் நகர்வது போல இருந்தது.

இவள் தானா தன்னை யாரோ போல கடப்பது..

தன் பார்வைக்காக காத்திருந்த இவளா..

தன்னை காதலித்த இவளா..
காதலித்த.. இந்த வார்த்தை ஜீரணிக்க முடியாமல் போக, காதலிக்கும் என திருத்திக் கொண்டான்.

ஜனனினினி.. அவளை அழைத்தான்..  திரும்பவில்லை.. வேகமாக இவனை விட்டு விலகி சென்று கொண்டிருந்தாள். இன்னும் உரக்க அழைத்தான்.. ஜனனினினி......

இம்முறையும் திரும்பவில்லை.. கேட்டிருக்காதோ.. கூட்டத்தை கடந்து அவளை நெருங்கி மீண்டும் அழைத்தான்

"ஜனனி.. ஜனனி.. இம்முறை நிச்சயம் கேட்டிருக்க வேண்டும் .. அவள் தோழி திரும்பிவிட்டாள்.. இவள் கண்டு கொண்டதாக கூட தெரியவில்லை.. அவள் முன் வழி மறித்து நின்றான்.

அவள் விழிகள் இன்னும் நிலம் கண்டவாறே இருந்தான..

" ஜனனி... " அவளை நோக்கி சிரம் தாழ்த்தி மெல்லிய குரலில், " ஜனனி.. என்னை பாரு.. என்ன நடந்துது.. என்கிட்டே பேசு.. "

இறகாய் இரு இதயம்Where stories live. Discover now