பயணம் 26

1.3K 84 22
                                    

ராஜாவை சமாதானப்படுத்த முயற்சித்தாள் ராதிகா. " உன் கஸ்டம் எனக்கு புரியுது ராஜா, ஆனா நாம சில விசயந்த புரிஞ்சிக்கனும், உன் காதல் ராணிய  திருமணம் செய்யதால் தான் ஜெயிச்சதுனு அர்த்தம் இல்ல கண்ணா, நீ அவள விட்டுத்தரதுனால அவ வாழ்க்கை காப்பாற்றப்படுதுனா அப்போ நீ விட்டுக் கொடுத்தாலே உன் காதல் வெற்றி பெற்ற மாதிரி தான், அட்வைஸ் பண்றது சுலபம் அனுபவக்கறவங்களுக்கு தான் வலி தெரியும் என்பது எனக்கு  தெரியும் இருந்தாலும் உனக்கு எடுத்து சொல்ல வேண்டிய இடத்தில நான் இருக்கேன் அதான் சொல்லுரேன்" என ராதிகா கூற, ராஜாவின் கண்களில் கண்ணீர் தேங்கி நின்றது.

பேச வார்த்தைகள் வராமல் அமைதியில் முழுகியிருந்தான் ராஜா.
"நீ தனியா யோசி ராஜா, நான் சொல்வது புரியும், நான் கிளம்புரேன்" என கூறிவிட்டு அந்த இடத்தைவிட்டு நகர்ந்தாள் ராதிகா.

எப்போதும் ராஜாவுக்கு பிடித்த இரவின் தனிமை இன்று பிடிக்காமல் போனது, நரகத்தில் வாழ்கிறோமோ என்று கூட யோசிக்க தோன்றியது. அச்சமயம் அவனின் கூடாரத்திற்குள் ராணி நுழைய, எதிர்பாராத ராணியின் வருகையினால் தன்னை சமாளிக்க சற்று நிரமப்பட்டான் ராஜா, சுவற்றின் பக்கம் திரும்பி தன் கண்களில் தேங்கியிருந்த கண்ணீரை துடைத்தவன், ராணியிடம் சகஜமாய் பேச முயற்சி செய்து தொற்றுப்போனான்.

ராஜாவின் சிறு அசைவையும் பரிட்சியப்படுத்தி இருந்த ராணிக்கு அவனின் இன்றைய நிலையை தெரிந்துக்கொள்வது பெரிய விசயமாக இல்லை.

"சொல்லு ராஜா, என்ன பிரச்சனை ?" என ராணி கேட்க, "அதெல்லாம் ஒன்னும் இல்ல ராணி, லைட்டா தலை வலி அதான்..." என இழுத்தான்.

"என்ன ராஜா, எப்படி என்னை கழட்டிவிடறதுனு ப்ளேன் போட்டுக்கிட்டு இருக்கியா? " என ராணி கேட்க, அவளின் முகத்தை அதிர்ச்சியுடன் பார்த்த ராஜாவிற்கு வாயிலிருந்து வார்த்தைகள் ஏதும் வரவில்லை, அப்படியே சற்று நேரம் அதிர்ச்சியில் உறைந்தவன் சற்று நொடியில் தன்னை சுதாரித்துக்கொண்டு, "ஏய் லூசு என்ன  ஏதேதோ பேசுற, லூசாயிட்டியா??" என்றான் ராஜா .

காட்டிற்குள் ஒரு பயணம் (Available On Amazon Kindle)Where stories live. Discover now