பயணம் 24

1.3K 83 13
                                    

குழந்தைகளை உள்ளே அனுப்பியப் பின், சுற்றிமுற்றிப் பார்த்தான் ராஜா. அந்த உருவம் தென்படவில்லை, ராஜாவின் கோபம் தலைக்கு மேல் ஏறியது, நேராக ராணி இருக்கும் இடத்தை நோக்கி நடந்தவன், அவளின் முகத்திற்கு முன் சென்றான், அவளின் மென்மையான கன்னத்தை தன் இரு கரங்களால் பிடித்தவன், தன் இதழினை அதனில் பதித்தான், பின் அங்கே நிற்காமல் வேகமாக மீண்டும்  அந்த மரத்தின் அருகில் சென்று, கைக்கட்டி நின்றான். இதனை எதிர்பார்க்காத ராணி  பயந்துப்போனால், "இவனுக்கு என்னவாயிற்று, திடீரென வந்தான், முத்தம் கொடுத்தான், வேகமாக நடந்து மரத்தின் கீழே சென்று நிற்கிறான்" என யோசித்தவளாய் இருந்தாள்.

ராணியிடம் ஏதேனும் உரிமை எடுத்துக்கொண்டால் அந்த உருவம் இவன் முன் வரும் என ராஜா நன்கு தெரியும், அதனால் தான் ராணியிடம் அப்படி நடந்துக்கொண்டான். ராஜா நினைத்தது போலவே அவ்வுருவம் அவன் முன் வந்தது, "ராணிய நெருங்காதனு உனக்கு எத்தன முறை சொல்வது? கேக்க மாட்டியா??" என்ற அச்சிறுவனின் குரல் ராஜாவின் செவிக்கு விழ, "நீ எனக்கு தானே இந்த விதிகளை போட்டாய், குழந்தைகளை ஏன் தள்ளிவிட முயற்சித்தாய்?? எதுவா இருந்தாலும் அது என்னோட முடியட்டும், தேவையில்லாம மத்தவங்களுக்கு தொந்தரவு கொடுத்த, நான் பயங்கரமானவனாக மாறிடுவேன்" என ராஜா சற்று குரலை உயர்த்தி கோபத்துடன் பேச, "ஹா ஹா ஹா....." என சிரித்துக்கொண்டே அங்கிருந்து மறைத்தது அவ்வுருவம்.

கடுப்பில் இருந்த ராஜா தலையில் கையை வைத்துக்கொண்டு கீழே அமர்ந்தான், அங்கே வந்த ராதிகா "என்ன ராஜா? ஏன் இப்படி உடைஞ்சிபோயி உட்காந்திருக்க? என்ன விசயம் ? எதுவா இருந்தாலும் என் கிட்ட சொல்லு? " என ராதிகா கேட்க, "அதெல்லாம் ஒன்னுமில்லை அண்ணி" என பதில் கூறினான் ராஜா. "நான் உன்கிட்ட அண்ணி மாதிரியா நடந்துக்கறேன்? ஒரு பிரண்ட் போல தானே ப்ரியா பேசுறேன், ஏன் என் கிட்ட மறைக்கிற?? " என்று கேட்ட ராதிகாவின் கைகளை பிடித்துக்கொண்டு சற்று கண் கலங்கினான் ராஜா.

"டேய் ராஜா, என்னடா கண் கலங்குற? அப்படி என்னாச்சிடா?" என சற்று பதற்றத்துடன் மீண்டும் கேட்டாள் ராதிகா.

காட்டிற்குள் ஒரு பயணம் (Available On Amazon Kindle)Kde žijí příběhy. Začni objevovat