பயணம் 19

Start from the beginning
                                    

அடுத்த ஜந்து நிமிடத்தில் கீழே வந்த ராணி அவனை மீண்டும் கலாய்க்க, கடுப்பில் முகம் சுருங்கியவனாய் நின்றான் ராஜா.

"சரி சரி, இப்படி முகத்தை வச்சிக்காத, பார்க்க சகிக்கல, கூல் பேபி...என சாமாதானம் செய்த ராணியை ஆச்சர்யத்துடன் பார்த்தான் ராஜா.

"ஓய்... என்ன அப்படி பாக்குற" என ராணி கேட்க, அவளை நெருக்கி வந்து " என்ன மேடம் இன்னைக்கு நல்ல மூட்ல இருக்கிங்க போல" என கேட்க, வேட்கத்தில் அவனை தள்ளிவிட்டு ஹோட்டலுக்குள் ஓடினாள் ராணி.

"ஏய் ராணி, என்ன இங்க கூட்டிட்டு வந்துட்டு, டீல்ல விட்டுட்டு நீ நல்ல ரொமேன்ஸ் பண்ண கிளம்பிடற, என்ன பத்தி ஒரு நிமிசமாச்சும் யோசி டி, ஐ எம் பாவம்" என அப்பாவி முகத்துடன் ராணியை பார்த்து கேட்டாள் ராகினி.

"சாரி ராகினி " என அசடு வழிந்தவளாய் ராகினியிடம் மன்னிப்பு கேட்டாள் ராணி.

"சாரி எல்லாம் வேண்டாம், எனக்கு ஒரு ஆசை, அங்கே எதிரே தெரியும் மலைக்கு மேல ஒரு அருவி இருக்குனு வாட்ச்மேன் சொன்னாரு, ஆனா அங்க போக சரியான பாதை இல்லையாம், குழந்தைங்க எல்லாம் ஏற முடியாதுனு சொன்னாங்க, எனக்கு அந்த அருவிய பார்க்கனும்" என்றாள் ராகினி.

அவ்வளவு தானே, நான் ராதிகா அக்காகிட்ட கேட்கிறேன், நீ நான் ராஜா போகலாம் என கூறி அங்கிருந்து ராதிகாவின் அறையை நோக்கி நடந்தாள் ராணி.

கட்டிலில் குழந்தைகள் தூங்கிக்கொண்டிருக்க அவர்களின் அருகில் அமர்ந்து கதை புத்தகம் படித்துக்கொண்டிருந்தாள் ராதிகா.

"அக்கா,வரலாமா??" என கேட்டுக்கொண்டே அறைக்குள் நுழைந்தாள் ராணி.

"வாமா, என்ன முக்கியமான விசயமா?" ராதிகாவின் குரலில் சற்று கடினத்தை உணர்ந்தாள் ராணி. இருந்தாலும் தான் கேட்க வந்ததும் அவசியமான ஒன்று என்பதால் பேச துவங்கினாள்.

ராகினியின் அசையை கூறி முடிப்பதற்குள் அதற்கு ராதிகா மறுப்பு தெரிவிக்க சற்று நேரம் போராடி பின் சம்மதம் வாங்கினாள் ராணி.

"சாயங்காலம் 6 மணிக்குள்ள ஹோட்டல் வந்துடனும் புரியுதா" என ராணியிடம் ராதிகா கேட்க, "கரெக்டா வந்து விடுரோம் அக்கா" என கூறிவிட்டு கிளம்பினாள் ராணி.

"ராஜா... எங்க இருக்க, சீக்கிரம் வா" என்ற ராணியின் குரலை கேட்க ராஜா , மின்னல் வேகத்தில் வந்து அவள் முன் தொன்றினான்.

ராணியின் முகத்தையே பார்த்தவன் சட்டென கண்ணடிக்க,

காதல் நாயகன் கண்ணடிக்க,
கார்மேகம் சூழ்ந்த வானத்தைப்போல
தன் முகத்தை கைகளால் மறைத்துக் கொண்டாள்.

அவளின் கைகளை விலக்கியவன், "என்ன மேடம் ஏன் இந்த அடிமையை அழைத்தீர்கள்" என நக்கலடித்தான்.

"அதுவா எனக்கு கால் வலி, என்ன என் ரூம் வர தூக்கிட்டு போய் விடு" என அவனை கலாய்த்தால் ராணி.

சற்றும் தயங்காமல் அவளை தூக்கினான் ராஜா. பயத்தில் மிரண்ட ராணி, " லூசு என்ன கீழ விடு, நான் சும்மா சொன்னேன், ப்ளீஸ் ராஜா விடு" என கெஞ்சினாள் .

காட்டிற்குள் ஒரு பயணம் (Available On Amazon Kindle)Where stories live. Discover now