பகுதி - 01

613 19 9
                                    

💓💓💓நினைவெல்லாம்💓💓💓
                    பகுதி - 01
💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕

"டேய் திவா..!! எழும்புடா" என்று மரியாதையாக எழுப்பினாள் திவாவுடைய தங்கை பூஜா.
பூஜா : "டேய் அண்ணா எழும்புடா நேரம் ஆகிட்டு ஆபிஸ் போகலயா?"
திவா : "உனக்கு காலேஜுக்கு லேட் ஆகிட்டுனு சொல்லு நான்தான டுரோப் பண்ணணும்" என்று சொல்லிக்கொண்டே மேல் முறித்தவாறு எழும்பினான் திவாகர் என்கிற திவா. அவனின் அப்பா ஓய்வு பெற்ற ஆசிரியர், அம்மா ஹவூஸ் வைப் பூஜா காலேஜீல் படித்துக் கொண்டிருக்கிறாள்.

அம்மா : "திவா குளிச்சிட்டியாப்பா காபி வச்சிருக்கன் குடி"
பூஜா : "அவனுக்கு இப்ப காபிதான் கொறச்சல் நேரத்துக்கு எழும்புறதும் இல்ல மாடு மாதிரி படுக்குறது"
அம்மா : "அவனோட சண்ட பிடிக்காட்டி தூக்கம் வராதே உனக்கு"
பூஜா : "போம்மா...!! டேய் சீக்கிரம் வாவண்டா காலேஜிக்கு நேரம் ஆகிட்டு"
திவா : "இந்தா வாரண்டி ஒரு மனுசனுக்கு தங்கச்சியால தொல்ல இருக்கலாம் இது தொல்லயே தங்கச்சியா பொறந்தா"
பூஜா : "என்ன காமடியா சிரிப்பே வரல"
                 திவா ரெடி ஆகி வந்து பூஜாவுடைய காதைப் பிடித்து திருகினான்.
பூஜா : "அப்பா.....!!" என்று சத்தமாக கத்தினாள்.
அப்பா : "என்னம்மா அங்க சத்தம்?"
திவா, பூஜா : "பேசிட்டு இருக்கோம் அப்பா"
அப்பா : (மனதுக்குள்) "இது ரெண்டையும் திருத்தவே முடியாது"
திவா அம்மா : "ரெண்டு பேரும் சாப்பிடலயா?"
பூஜா : "எனக்கு வேணாம்மா லேட் ஆகிட்டு"
திவா : "அம்மா எனக்கு வேணும்"
பூஜா : "இவனுக்கு ஒரே சாப்பாடு சாப்பாடுதான்"
பூஜா : "கண்ணு வைக்காதடி உனக்கு வாணாட்டி போடி"
பூஜா : "சாப்பிட்டு தொலையிரன் இவனோடதான போகனு"
         திவா பூஜாவைப் பார்த்து சிரித்தான் பூஜாவும் அவனுடைய தொலையில் கொட்டினாள்.
திவா : "ஆ..... வலிக்குதுடி"
பூஜா : "நல்லா வலிக்கட்டும் உனக்கு தண்டன இது லேட்டானத்துக்கு"
அம்மா : "ரெண்டு வாய மூடிட்டு சாப்பிடுங்கடா"
பூஜா : "வாய மூடிட்டு எப்படிம்மா சாப்பிடுறது"
திவா : "காமடி... சிரிப்பே வரல நாளைக்கு சிரிக்கிறன்"
பூஜா : "போடா தடியன்"
அம்மா : "ஒன்னுவலோட கத்தி கத்தியே வாணான்டு போகுது, போங்கட சீக்கிரம்"  இப்படியே அம்மாவிடம் செல்ல திட்டு வாங்கி விட்டு அம்மா, அப்பாவிடம் சொல்லி விட்டு திவா பூஜாவை பைக்கில் ஏற்றிக் கொண்டு காலேஜில் இறக்கி விட்டு அவன் ஆபிஸ் கிளம்பினான்.

நினைவெல்லாம்..♡♡Where stories live. Discover now