பயணம் 13

Start from the beginning
                                    

அனைவரும் காலை சிற்றுண்டி முடித்துவிட்டு தங்கள் பயணத்தை துவங்கினர்.

வழக்கம்போல ஜன்னலோர இடத்தை பிடித்தாள் ராணி, வண்டி நகர சாலையில் இருந்த செடி கொடிகளும் அதனிடமிருந்து வந்த மென்மையான காற்றும் ராணியின் மனதை கொள்ளையடித்தது.

"டிரைவர் அண்ணே ஏதாச்சும் பாட்டு போடுங்க..." என குட்டீஸ் கேட்க அவரும் தலையசைத்து ப்ளேயரை ஆன் செய்தார்.

"முழுமதி அவளது முகமாகும்... மல்லிகை அவளது மணமாகும்...." என பாடல் ஒலிக்க அனைவரும் பாடலை ரசித்துக்கொண்டிருந்தனர்.

ராஜாவின் ஓரக்கண் பார்வை ராணியின் மீது பாய, ராணி தன்னையறியாமல் திரும்பி ராஜாவை பார்த்தாள்.

சட்டென கண் அடித்துவிட்டு தன் தலையை ஜென்னல் பக்கம் திருப்பிய ராஜா தன் தாடியை கைகளால் கொதினான்.

வெட்கத்தில் ராணி தன் பார்வையை தரையில் பாய்ச்சினாள். இதழோரம் வந்த மெல்லிய சிரிப்பில் ராணியின் முகம் முழுமதியை விட அழகாக தான் இருக்கிறது என ராஜா தன் மனதோடு பேசிக்கொண்டிருந்தார்.

இவர்களின் செயல்களை ராதிகாவும் ராகினியும் கவனிக்க தவறவில்லை.

ராதாகா தன் சி.பி.ஐ பார்வையை ராகினியின் பக்கம் திருப்பினாள்.

" இவங்களுக்குள்ள ஏதோ இருக்கு அக்கா, வெளியே எலியும் பூனையும் போல நடிச்சிக்கிட்டு ஏதோ ப்ராடு வேல பாக்குறாங்க..." என தன் கண்ணகளாளே ராதாகா விடம் ராகினி பேச, " ஆமா டி இனிமே இவங்க மேல ஒரு கண்ணு வைக்கனும் " என ராதிகாவும் தன் பார்வையையாலையே பேசினாள்.

அடுத்தவர் விசயத்தை விசாரிப்பதில், அதுவும் காதல் விசயத்தை விசாரிப்பதில் சி.பி.ஐ யை விட நம் ஊர் பெண்கள் தான் சிறந்தவர்கள் எனவே நாம் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும் என ராஜா தன் மனதிற்குள்ளே கூறிக்கொண்டிருந்தான்.

அடிக்கடி திரும்பி பார்த்த ராணியை கவனித்த ராஜா, என்ன வேண்டும் என தன் புருவத்தை உயர்த்தி கேட்க, சட்டென திரும்பிக்கொண்டாள் ராணி.

"ஐயய்யயோ ஆனந்தமே...." என அடுத்த பாடல் ஒலிக்க, இருவரும் தங்கள் மனதிற்குள்ளேயே சிரித்துக்கொண்டனர்.

காட்டு வழி சாலையில் வேன் மின்னல் வேகத்தில் சீறிப்பாய்ந்து சென்றுக்கொண்டிருந்தது.

அனைவரும் சற்று கண் அசந்தனர், ராஜா எழுந்து ட்ரைவர் பக்கத்தில் சென்று அவருடன் பேச துவங்கினான்.

"அண்ணே, வில்வாரணில என்ன சிறப்பு? " என கேட்க, அவர் ஸ்தல வரலாற்றை கூற துவங்கினார்,
"தம்பி, ஒரு பூசாரி தீவிர முருக பக்தர் அவர் கிருத்திகை என்றால் திருத்தணி கோயிலுக்கு அவருடைய குதிரையுடன்  சென்று இறைவரை வழிபடுதல் வழக்கம், ஒரு கிருத்திகை சமயத்தில் அவரால் கோயிலுக்கு செல்ல இயலவில்லை, எனவே அவர் மனசோர்வுடன் தன் வீட்டு திண்ணையில் படுத்திருந்தார். அந்த சமயத்தில் சற்று கண் அசர்ந்தார், அவரின் கனவில் தோன்றிய முருகப்பெருமான் நட்சத்திர மலையில் நாக வடிவில் இருப்பதாக கூறி மறைய, காலையில் பூசாரி தன் குதிரையுடன் மலைக்கு சென்றடைந்தார்.

அங்கே மலை முழுவதும் தேடும் போது அவருக்கு ஒரு சிலையும் அதற்கு நாகம் குடையாய் இருப்பது போன்று காட்சி அளிக்க அவர் அந்த சுயம்புலிங்க சிலையாக முருகப்பெருமான்,  வள்ளி தெய்வானை கடவுளையும் பிரதிக்ஸ்டை செய்து ஒரு குடிசை அமைத்து கிருத்திகை காலங்களில் பூசை செய்தார், பின் அங்கு கோயில் கட்டப்பட்டது. மலை மீது இருக்கும் சுமம்பு லிங்க வடிவிலான முருப்பெருமான் கோயில் வில்வாரணியின் தனி அழகு என கூறி முடித்தார்.

சுவாரசியமான வரலாறு ரொம்ப நன்றி  அண்ணே, நாம எப்போ வில்வாரணி அடைவோம் என ராஜா கேட்க, " ஒரு மணி நேரத்தில போயிடலாம் தம்பி" என பதில் கூறினார் ட்ரைவர்.

குறிப்பு : இந்த அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ள வில்வாரணி திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைத்துள்ளது. இந்த கோயிலின் உண்மையான தல வரலாறு தான் மேலே கதையில் கூறப்பட்டுள்ளது.

நன்றி வாசகர்களே!...

காட்டிற்குள் ஒரு பயணம் (Available On Amazon Kindle)Where stories live. Discover now