கொற்றவை

Começar do início
                                    

இந்த போரில் யாருடைய வேல் யாரை தாக்கும் என்பதே தெரியவில்லை . எங்கும் நிறைந்த புழுதி மூட்டமும் , கூவல்களும், ஓலங்களுமாய் இரைச்சல் திசையெங்கும் நிறைந்திருந்தது. யார் பகைவன், யார் நண்பன் என்று தெரியவில்லை. யாருக்காக யார் போரிடுகிறார் என்று தெரியவில்லை. தன்னை தாக்க வந்த அனைவரையும் கொன்றான் கட்டியங்கன். அதை தவிர வெல்ல இங்கு வேறு வழியில்லை. தனது சக கள்வர்கள் உயிரோடு இருக்கிறார்களா..? தன்னை போலவே மருத வீரர்களை கொன்று குவிக்கிறார்கள.. இல்லை குவியலாக தரையில் கிடக்கிறார்களா என்பதெல்லாம் அவனுக்கு தெரியவில்லை, அந்த களத்தில் அவன் மட்டுமே அவனது படை, அவன் மண்ணில் வீழும் வரை இந்த பாலை வீழ்ந்து விடாது.

    கால் இடறி விடுமோ என்ற பயத்திலேயே போரிட்டாலும் மருத வீரர்களை கொல்வது சுலபமாக இல்லை. ஒவ்வொரு வீரனும் தன் உயிர் பிரியும் முன் தன் வாளால் கட்டியங்கனுக்கு நினைவு பரிசளித்தே சென்றிருந்தானர . ஓலங்கள் கொஞ்சம் கொஞ்சமாய் ஓயாத தொடங்கின. புழுதி மூட்டம் சிறிது சிறிதாக தெளிய தொடங்கிற்று. கட்டியங்கன் உடல் முழுதும் வாள்கள் முத்தமிட்டிருந்தன. இருந்தும் இன்னும் ஒரு படையையும் சமாளிக்க அவன் மனதில் தெம்பிருந்தது. புழுதி மூட்டம் அகலவும் பிணக் குவியல்கள் பள்ளத்தாக்கையே மூடி விட்டதை கண்டான். வல்லூறுகள் கூட இந்த பிணங்களை நெருங்க பயந்து வானையே வட்டமடித்துக் கொண்டிருந்தன. இளவரசனின் ரதம் ஒரு ஓரத்தில் சாய்ந்து கிடந்தது. அதன் ரத்தினங்களும் வைரங்களும் குருதியில் தோய்ந்து போலிவிலந்திருந்தன. ஆங்கங்கே வீரர்கள்.. இல்லை களவ்ர்கள் இவனை போலவே நின்று கொண்டு இருந்தனர். ஒரு மருத வீரனையும் காண முடியவில்லை.

அவன் கண்கள் முதலில் தன் நண்பன் கொம்பையனையே தேடியது, அதோ.. தொலைவில் அவனை கண்டு விட்டான். வேம்புலியனும் அவனுடன் இருக்கிறான். ஊமையனும் அவன் தம்பியும் ஒரு புறத்தில் நின்று கொண்டிருந்தனர். முத்தரையர்.. முத்தரையர் எங்கே என்று அவன் எண்ணிய வேளை. சற்று தொலைவில் நான்கு மருத வீரர்களின் பிணங்களின் மேல் பிணமாக சரிந்து கிடந்தார். சாகும் வேளையிலும் நால்வரை கொன்று தான் வீழ்ந்திருக்கிறார், அவர் எண்ணிய சாவு இது. நல்ல சாவு என எண்ணிக் கொண்டான். அவருக்கு மரியாதை செலுத்தி விட்டு, தன் கூட்டத்தை நோக்கி நகர்ந்தான்.

கொற்றவைOnde histórias criam vida. Descubra agora