பயணம் 1

4.3K 142 63
                                    


காலைக்கதிரவன் கிழக்கே பிறக்க..
வெண்நிலவு வெண் மேகங்களோடு மறைய...

குயிலும் குருவியும் இறை தேடி ஓட,
குனிந்திருந்த சூரியகாந்தி தன்னவன் திசை நோக்கி சிரிக்க...

மல்லியும்,முல்லையும் மலர்ந்து அனைவரையும் மகிழ்விக்க,
மங்கள பாடல்களில் இசை கோயிலில் இருந்து பாய்ந்து வந்து அனைவரின் வீட்டின் கதவையும் தட்ட.....

இவ்வுலகில் என்ன நடந்தாலும் ஆறு மணிக்கு முன்னே கண்களை திறக்க மாட்டேன் என்றவாரு போர்வையை இழுத்து போர்த்திக்கொண்டு நித்திரையில் இருந்தாள் நம் நித்திரா தேவியான ராணி.

"ஏய் ராணி, எழுந்திரு டீ....., மணி ஆறு.... இப்ப எழுந்திரிக்கிறியா இல்ல தண்ணீரோட வரட்டுமா?????" என்ற அம்மாவின் குரல் கேட்டு அதிர்ந்து எழுந்தாள் ராணி.

“இந்தம்மா செய்தாலும் செய்யும், மகளை காலையிலேயே எழுப்பிவிடரதுல அம்மாக்களுக்கு என்ன அப்படி ஒரு சந்தோஷம்னு தெரியல, நான் எழுந்து எதாவது வேலையா செய்ய போரேன்??, ஒன்னும் செய்ய மாட்டேன், சும்மா பேப்பர் படிச்சிக்கிட்டு காப்பி குடிச்சிகிட்டு அப்பா கூட சண்ட போட்டுக்கிட்டு இருப்பேன், இதெல்லாம் இவங்களுக்கு தொந்தரவு தானே.... லீவ் நாள் தானே, என்ன எழுப்பாம விட்டுட்டா அப்படியே ஜாலியா தூங்கி மதியம் சாப்பாட்டுக்கு ஷார்ப்பா எழுந்திருப்பேன்... “ என தனக்குத்தானே புலம்பிக்கொண்டு தன் கட்டிலில் இருந்து எழுந்தாள்.

"மகாராணி எழுந்து வரதுக்கு இவ்வளவு நேரமா..." என கேட்ட சாவித்திரியிடம், "அம்மா நீ எனக்கு ராணினு தான் பேர் வச்சன்னு சொன்னாங்க, என் முழு பேரு மகாராணியா" என நக்கலாக ராணி கேட்க, " தாயே, ஆள விடும்மா,எனக்கு நிறைய வேலை இருக்கு, மார்க்கெட் வர போகனும், உங்க அப்பாக்கு உடம்பு முடியலையாம், நான் நடந்து தான் போகனும்" என சலித்துக்கொண்டு கூறினாள் சாவித்திரி.

"அப்போ சீக்கிரம் கிளம்புமா, வெயில் வந்துட போது" என்ற ராணியை பார்த்து "அப்ப கூட ஒரு வார்த்த சொல்லராலா பாரு, நான் போயிட்டு வரேன்னு....சொல்ல மாட்ட, சோம்பேரி கழுதை... " என மனதிற்குள்ளே பேசிக்கொண்டு வீட்டு வாசலுக்கு வந்தாள் சாவித்திரி.

எதிர் வீட்டின் வாசலில், தனது வண்டியை ஸ்டார்ட் செய்து கொண்டிருந்தான் ராஜா.

"என்னங்க அத்த, காலையிலேயே பையோட, ஊருக்கா???" என கேட்டான் ராஜா.

"வெறும் பையோட ஊருக்கு போனா யாரு வீட்டுடலடா சேர்ப்பாங்க..." என கிண்டலாக பதில் கூறிவிட்டு, மார்க்கெட் வர போகிறேன் ராஜா என்றாள் சாவித்திரி.

" ஏன் அத்த, இந்த மாமா எங்கே?  அவரு போகலையா?" என வினாவினான்.

" இல்ல, அவருக்கு உடம்பு கொஞ்சம் அசதியா இருக்காம்.." என்றவளை,  "வாங்க அத்த, நான் மார்க்கெட் பக்கம் தான் போரேன், உங்கள விட்டுடரேன்" என்றான் ராஜா.

சரி என தலையாட்டினாள் சாவித்திரி, பின் இருவரும் வண்டியில் புறப்பட்டனர்.

இதனை ஜன்னல் வழியே பார்த்த ராணிக்கு கோபம் உச்சி மண்டைக்கு ஏறியது.

"நம்ம எதிரி கூட இந்த அம்மாக்கு என்ன பேச்சு வேண்டி கிடக்கு, பேசிட்டு கூட போகட்டும், அவன் கூட எதுக்கு வண்டியில போறது, வரட்டும் வீட்டுக்கு, அப்பரம் இருக்கு...." என முனுமுனுத்தாள் ராணி.

சின்ன வயதில் இருந்தே ராஜாக்கும் ராணிக்கும் ஏக பொருத்தம், விளையாடும் பொழுது எப்போதும் சண்டை தான், அடிப்பது, கிள்ளுவது என அனைத்து அட்டூழியங்களையும் செய்யும் வில்லங்கமான ஆள் நம்ம ராணி, கடைசியில் பழியை தூக்கி ராஜா மேல போட்டுட்டு, ராஜாவை அவன் வீட்டுல இருக்கவங்க கிட்ட போட்டு கொடுத்துட்டு அசால்டா போயிடுவாள்.

இவ்வாறு நடந்து கொண்டே இருக்க, ராணியின் அம்மா சாவித்திரி இதனை கண்டுபிடுத்துவிட்டாள்.
"அப்பாவி பையன ஏன்டீ தேவையில்லாம மாட்டிவிடரனு", ராணியை போட்டு அடிக்க,
இதனை பார்த்த ராணியின் அப்பா, இனிமே நீ ராஜா பயலோட விளையாடவே போகவே கூடாது என சொல்ல, அப்போழுதில் இருந்து இவர்கள் இருவரும் இந்தியா பாகிஸ்தான்...

தன் அத்தை மாமா என இருவரிடமும் பாசமாக இருக்கும் ராஜா , ராணியைக் கண்டால் காணாமல் போயிடுவான். ராணியும் அதே போல தான், ராஜாவின் அண்ணண்களின் குழந்தைகள் அனைவருக்கும் ராணி தான் கேங் லீடர்.

காட்டிற்குள் ஒரு பயணம் (Available On Amazon Kindle)Where stories live. Discover now