லீலை

4K 76 23
                                    

"இது நிவியின் அம்மாவின் கட்டளையா? என்ன சொல்றீங்க ? கொஞ்சம் புரியும்படி சொல்லுங்க அங்கிள் "என்றேன்.
"ஹேமாவுக்கு ஆதரவில்லாதவர்களுக்கு துன்பத்தில்  இருப்பவர்களுக்கு எல்லாம் நிறைய உதவிகள் செய்யவேண்டும் என்பது ஒரு லட்சியம். அவள் செய்ய ஆசைப்பட்டதையெல்லாம் நீ செய்து கொண்டிருக்கிறாய். உன் சேவையில் அவள் பங்கும் இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. அதனால் தான் இந்த டாக்குமென்டை ரெடி பண்ணி இருக்கேன். இதை வைத்து நீ நிறைய இயர்ன் பண்ணலாம். ஹோமில் இருக்கும் அனைவரின் தேவைகளையும் தாராளமாக நிறைவேற்றி வைக்கலாம். இது உனக்கு ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும். மறுக்காம வாங்கிக்கமா." என்றார் அங்கிள்.

அனைவரும் வற்புறுத்தி சொல்லவும் நான் சரி என்று ஒப்புக்கொண்டேன்.
மேலும் அதில் எனக்கு முழு உரிமை இருப்பதால் எனக்கு எந்த உறுத்தலும் தோன்றவில்லை. மகிழ்ச்சியுடன் அறைக்கு வந்தேன்.
எனக்கு ஏன் எந்த உறுத்தலும் தோன்றவில்லை? விடை இதோ இந்த டைரி தான்.

சதீஷின் (நிவியின் அப்பா) டைரி

ஜனவரி 22

ஹேமாவும் நானும் காதலித்து பல எதிர்ப்புகளை மீறி திருமணம் செய்து கொண்டோம். திருமணமாகி ஆறுமாதங்கள் கழித்து ஒரு நாள் அவள் மயங்கி விழுந்தாள். டாக்டரிடம் அழைத்துச் சென்றேன்.
ஏதாவது ஒரு நல்ல செய்தியாக இருக்கலாம் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருந்தேன். ஆனால் டாக்டர் என் தலையில் இடியை இறக்கி விட்டார்.
ஹேமாவின் இருதயம் பலவீனமாக இருக்கிறது. அதிக இன்பமானாலும் சரி துன்பமானாலும் சரி அது அவள் உயிரைக் குடித்து விடும். எந்த அதிர்ச்சியையும் தாங்கும் சக்தி அவளுக்கு இல்லை. இன்னிலையில் அவள் கர்ப்பம் தரிப்பது கடினம். ஒருவேளை கர்ப்பம் ஆனாலும் ஒரு குழந்தையை பெற்றெடுக்கும் சக்தி அவளுக்கு இல்லை. அவளை நான் மிகவும் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும். அவளை எந்தவொரு கடினமான வேலையும் செய்யாமல் பார்த்துக்கொண்டேன். அவளையே என் குழந்தையாக பாவித்தேன். இப்படியே ஐந்து வருடங்கள் கழிந்தன.
திடீரென்று ஒரு நாள் மீண்டும் மயங்கி விழுந்தாள். பதறிப் போய் டாக்டரை வர வைத்தேன். இம்முறை டாக்டர் பரிசோதித்து விட்டு அவள் கர்ப்பம் என்று கூறினார். ஆனால் அவள் குழந்தை பெறுவது அவள் உயிருக்கு ஆபத்து ஆகலாம். அதனால் அபார்ஷன் செய்து விடுவது நல்லது என்றார். ஆனால் ஹேமா பிடிவாதமாக மறுத்து விட்டாள். நிச்சயம் நல்லபடியாக குழந்தையை பெற்றெடுத்து வளர்ப்பேன் என்று உறுதியாக கூறிவிட்டாள்.

யாரோ     (Completed)Where stories live. Discover now