த்ரி ரோஸஸ்...

2.2K 86 10
                                    

கல்லூரியில் ....
வகுப்பில் பூர்ணி நிவியை எதிர்பார்த்துக்கொண்டிருந்தாள். சரியான நேரத்தில் நிவி உள்ளே நுழைந்தாள்.

நிவேதிதா: "ஹாய் ரொம்ப சீக்கிரமா வந்துட்டியா? எனக்கு கொஞ்சம் லேட் ஆயிடுச்சி. நல்லவேளை இன்னும் மேம் வரல."

பூர்ணி: "ஹாய் நானும் இப்பதான் வந்தேன். உன்னப்பாத்தா ரொம்ப சந்தோசமா இருக்கிறமாதிரி இருக்கு. என்ன விஷயம்."

நிவி: "எப்படி கரக்டா கண்டுபிடிச்ச? ஆமாம். அப்பா இந்த வீக்என்ட்ல இந்தியா வர்ரார். காலைலதான் போன் பேசினப்ப சொன்னார். ஒருவாரம் இங்கே என்கூடவே இருக்கபோறார்."

அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே ஆசிரியர் வகுப்பில் நுழைந்தார்.

நிவியின் அப்பா சதீஷ்குமார் நிவி பிறக்கும்போது இந்தியாவில்தான் இருந்தார். மனைவி இறந்தபின் மிகவும் மனமொடிந்து போனார். இவரின் அக்கா லலிதா இவருக்கு ஆறுதல் கூறி தேற்றினார். நிவியை வளர்க்கும் பொறுப்பையும் ஏற்றார்.

லலிதா திருமணம் செய்துகொள்ளவில்லை. ஏனோ தெரியவில்லை அவளுக்கு திருமணம் செய்வதில் உடன்பாடில்லை. வீட்டில் அனைவரும் வற்புறுத்தியும் அவள் முடிவாக மறுத்து விட்டார்.

நிவியின் அம்மா உடல்நிலை மோசமானபோது அவளுக்கு உதவ இவர்கள் வீட்டிற்கு வந்தாள்.சிகிச்சை எதுவும் பலனின்றி அவள் இறந்தபின் லலிதா அங்கேயே இருக்கவேண்டியதாகப் போயிற்று.

பூர்ணி: " அப்புரம். என்ன ப்ளான்? காலேஜுக்கு வருவியா. அப்பா வந்துட்டா உன்ன கைலபிடிக்கமுடியாதே."

நிவி: "ஆமாம். நெக்ஸ்ட்வீக் ஃபுல்லா நான் எஞ்சாய் பண்ணப்போறேன். காலேஜுக்கு வரமாட்டேன். லீவ்போடப்போறேன். "

பூர்ணி: "நீ லீவ் போடவேண்டிய அவசியமில்லை. காலேஜே லீவ் தான். புராஜக்ட் கம்ப்ளீட் பண்ணாதவங்களுக்காக ஃபைனலியர் ஸ்டூன்ட்ஸுக்கு மட்டும் நெக்ஸ்ட்வீக் லீவ். வீ ஹேவ் கம்பளீடட் அவர் ப்ராஜக்ட். ஸோ வீயார் ஃபிரீ அன்ட் யூ கேன் எஞ்சாய் தீஸ் ஹாலிடேய்ஸ் வித் யுவர் டேட்."

நிவி: நான் மட்டுமில்ல. நீயும் தான்

பூர்ணி: எனக்கு போர் அடிக்கும்.
வீட்ல அம்மா இதைச்செய் அதைச்செய்னு சொல்லிகிட்டு இருப்பாங்க. சமையல் கத்துக்கொடுக்க ஆரம்பிச்சிடுவாங்க.
ஒரே போர்.

நிவி: என் கூட நீயும் வரியா? நாம எங்கேயாவது பிக்னிக் போகலாம்.
ஊட்டியில இருக்கிற கெஸ்ட்ஹவுஸ்க்கு போகலாம். ரொம்ப ஜாலியா இருக்கும். வி ஷேல் ஹேவ் ஃபன்.

பூர்ணி: எங்க வீட்ல பர்மிஷமன் குடுக்கமாட்டாங்க.

நிவி: நான் வந்து கேக்கிறேன். நான் கேட்டா அங்கிளும் ஆண்டியும் மறுக்கவே மாட்டாங்க. ஐ ஆம் வெரி ஷ்யூர்.

உஷா: என்ன பர்மிஷன்? எதுக்கு பர்மிஷன்?

நிவி: ஹாய் உன்னோட ப்ராஜக்ட் ஒர்க் முடிஞ்சுதா?

உஷா: ஒருவழியா முடிஞ்சது.

நிவி: அப்ப யூ ஆல்ஸோ கம் வித் அஸ்.
வி ஷேல் ராக் இன் ஊட்டி.

உஷா வேறயாருமில்ல நான்தான்.
நான் காலேஜ்லதான் அவங்க இருவரையும் பார்த்தேன். முதல் நாளே அவர்கள் இருவரையும் மிகவும் பிடித்து போயிற்று. உடனே பேசிப்பழகி நண்பிகளாகி விட்டோம்.
எங்களுக்கு காலேஜ்ல த்ரி ரோஸஸ்னு பேர்.

இதுவரை எங்களை உங்களுக்கு அறிமுகம் செய்தேன். இனி இந்தக்கதையில் திருப்பங்களையும்
சுவாரஸ்யமான நிகழ்ச்சிகளையும் பார்க்கலாம்.

யாரோ     (Completed)Where stories live. Discover now