மகிழ்ச்சிப்பூ

Start from the beginning
                                    

"என்ன அங்கிள் சொல்றீங்க?. இதெல்லாம் பூரணிக்கு எதுவும் தெரியாதா?"

"தெரியாதும்மா. தெரிஞ்சா அது அவளோட மனநிலைய பாதிக்கும். அதனால அவகிட்ட எதையும் சொல்லல"

அதற்குள் என் மனம் "ஒரு வேளை நான்தான் அந்தக் குழந்தையோ? யாராவது தூக்கிட்டு போய் கோயில்ல போட்டங்களோ?" என்று சிந்தித்தது.
நெஞ்சம் படபடத்தது. கேட்டுவிடலாமென்று வாய் திறக்கப்போனேன். அதற்குள் அங்கிள் " உன்னைப்பார்த்தப்ப ஒருவேளை நீ தான் எங்க பொண்ணோன்னு எங்களுக்கு சந்தேகம் வந்துச்சி. உன்மேல் எங்களுக்கு ரொம்ப அன்பும் பாசமும் உண்டாச்சி. ஒருவாட்டி உனக்கு ரொம்ப ஜொரமா இருந்தப்ப எங்க டாக்டர் கிட்ட காட்டினோம். அப்ப ப்ளெட் டெஸ்ட் பண்ணாங்க இல்ல. அப்பதான் அந்த டாக்டர் கிட்ட கேட்டு டிஎன்ஏ டெஸ்ட் பண்ணோம். நீ என் மகள் இல்லன்னு ரிசல்ட் வந்தது. ரொம்ப வருத்தமாக இருந்தது. ஆனா நாங்க உன்ன எங்க மகளாத்தான் நினைக்கிறோம்" என்றார்.
எனக்கு என்ன சொல்வது என்று புரியவில்லை. மனதில் ஒருவினாடி பூத்த மகிழ்ச்சிப்பூ உடனே உதிர்ந்தது. ஏதோ ஒரு வேதனை மனதில் நிறைந்தது.

"அழாதீங்க ஆண்டி. எங்க இருந்தாலும் உங்க நல்ல மனசுக்காக உங்க பொண்ணு ரொம்ப நல்லா இருப்பா. நீங்க கவலைப் பட்டு உங்க உடம்ப கெடுத்துக்காதீங்க."என்று அவர்களைத் தேற்றினேன்.

அப்போது உஷா உஷா என்று நிவி அழைத்தது கேட்டது. உடனே ஆண்டி கண்களை துடைத்துக் கொண்டார். மூவரும் சாதாரணமாக இருப்பதுபோல் சுதாரித்தோம். அங்கிள் கதவைத்திறந்தார்.

"ஹே உஷா நீ இங்க தான் இருக்கியா? உன்னைத் தேடித் தான் வந்தேன். ஏன் இன்னும் தூங்காம முழிச்சிக்கிட்டு இருக்கீங்க."என்றாள் நிவி.
"ஒண்ணுமில்லை. பூரணிய பிரியப்போறத நெனச்சி ஆண்டி கவலப்பட்டுகிட்டு இருந்தாங்க. அதான் அவுங்க கூட கொஞ்சம் பேசிக்கிட்டு இருந்தேன்.
நிவி பூரணியின் அம்மாவின் அருகில் சென்று அவர்களை கட்டியணைத்துக் கொண்டாள்."ஆண்டி எங்க ரெண்டு பேருக்குமே அம்மா இல்ல. உங்களதான் அம்மாவா நினைக்கிறோம். நீங்க எங்கள உங்க மகளாக நினைக்கலியா?"என்றாள்.
"உங்க ரெண்டு பேரையும் என் பொண்ணாதான் நினைச்சிட்டு இருக்கேன்"

"அப்புறம் ஏன் கவலப்படுறீங்க. பூரணி கல்யாணத்த நெனச்சி சந்தோஷமா இருங்க. அவ மனசுக்கு அவ ரொம்ப ஹாப்பியா இருப்பா. அப்புறம் நாங்க உங்க கூட இருப்போம். அவ இல்லாத குறையே தெரியாம பாத்துக்கறோம்."

ஆண்டி புன்னகைத்துவிட்டு எங்கள் இருவரது கன்னத்தையும் ஒவ்வொன்றாக தடவினார். ஒருவாறு ஆறுதல் அடைந்தார் "சரிம்மா நீங்க போய் தூங்குங்க. காலைல சீக்ரமா எழுந்துக்கணுமில்ல. பூரணி ரூம்ல தனியா இருக்கா. நீங்களும் போய்ப்படுங்க. " என்றார்.
நானும் நிவியும் அறைக்குள் சென்றோம். பூரணி நன்றாக தூங்கிக்கொண்டிருந்தாள்.கதவை மூடிவிட்டு இருவரும் படுத்து தூங்கினோம்.

நான் அம்மாவின் மடியில் தலை வைத்து படுத்துக் கொண்டு தூங்கினேன். அம்மாவின் மடி மிகவும் சுகமாக இருந்தது. இப்படியே காலம் முழுவதும் இருக்கவேண்டும் என்று தோன்றியது. ஆனால் அம்மாவுக்கு கால் வலிக்குமே. அம்மா முகம் எப்படி இருக்கும். பார்க்கவேயில்லையே. பார்க்கவேண்டும். பார்க்கவேண்டும் என்று மனம் துடித்தது. கண்களைத்திறந்து பார்க்க முயன்றபோது....

_______________*********___________

Hi friends,
Thank you for reading and voting.
Continue reading to get answers for your questions. I try to update soon.

யாரோ     (Completed)Where stories live. Discover now