தேவதை

Începe de la început
                                    

ஒருநாள் பூரணி வீட்டில் நாங்கள் அரட்டை அடித்துக் கொண்டு இருந்த போது பூரணியின் தந்தை மாப்பிளை போட்டோவைக் கொடுத்தார். மாப்பிளை டெல்லியில் இருப்பதாகவும் நல்ல உத்தியோகம், நல்ல சம்பளம், தூரத்து சொந்தம், பொருத்தமான ஜாதகம் என்றும் கூறினார். பூரணிக்கு சம்மதம் என்றால் நாளை பெண்பார்க்க வரச்சொல்லலாம் என்றார்.

நாங்கள் அந்த போட்டோவை எடுத்து பார்த்தோம். மாப்பிளை மிகவும் நன்றாக இருந்தார். பூரணிக்கும் பிடித்தது.
மறுநாள் பெண்பார்க்கும் படலம். மாப்பிளைக்கு பூரணியை மிகவும் பிடித்துவிட்டது. திருமண ஏற்பாடுகள் வேகமாக நடந்தன.

பூரணியை பிரியப்போகிறோமே என்பதை எண்ணும்போதே என் நெஞ்சம் கனத்தது. நிவியும் அதே மன நிலையில்தான் இருந்தாள். அவள் அழுதேவிட்டாள். நான் "அழாதே நிவி. அவளுக்கு நல்ல வாழ்க்கை அமையப்போகுது. அவளுக்கு நாம இப்படி கஷ்டப்படுறது தெரியக்கூடாது. தெரிஞ்சா அவளும் வேதனப்படுவா. நமக்கே இப்படி இருக்கே. அவ அம்மா அப்பாவுக்கு எவ்ளோ கஷ்டமா இருக்கும். ஆனா அவுங்க எவ்ளோ சந்தோஷமா கல்யாண வேலைகளை பார்த்துக்கிட்டு இருக்காங்க. நாமளும் அப்படித்தான் இருக்கணும்." என்றேன்.
நிவியும் " ஆமா உஷா. எனக்கு உன்னைப்பற்றிதான் கவலையா இருக்கு. அப்பா எனக்கும் அவரோட ஃப்ரண்டோட சன்னுக்கும் பொருத்தம் பார்த்துகிட்டு இருக்கார்.
ஒருவேளை ஜாதகம் பொருத்தமா இருந்தா நானும் உன்னை விட்டு பிரியணும்.என்ன பண்றதுன்னே தெரியல."
"மாப்பிளை எந்த ஊர்"
"USA டெக்சாஸ் ல பிசினஸ். அங்கேதான் ரெசிடன்ஸ். கிரீன் கார்ட் ஹோல்டர். டேடிக்கு ரொம்ப நல்லா தெரிஞ்சவர்"
"ரொம்ப நல்ல விஷயம். கங்ராட்ஸ். கண்டிப்பா ஜாதகம் பொருத்தமா இருக்கும். எனக்கொன்னும் கஷ்டமில்லை நிவி. எனக்கு உங்கள பாக்கணும் பேசணும்னு தோணிச்சுனா இருக்கவே இருக்கு  இன்டர்நெட். ஸ்கைப் வாட்ஸேப் னு எதுல வேணும்னாலும் பாத்துக்கலாம் பேசிக்கலாம். "
நிவி என்னைக்கட்டிப்பிடித்துக்கொண்டாள்.
எனக்கு அழுகை வந்தது. ஆனால் நான் சமாளித்து கொண்டு  "கிளம்பலாம். இன்னிக்கு ரிசப்ஷன். அவ காலைல இருந்தே அவ கூடத்தான் இருக்கணும்னு சொல்லிருக்கா. இப்பவே லெவனோக்ளாக் ஆயிடுச்சு. லேட்டா போனா கோவிச்சுக்குவா. சீக்கிரம் போலாம் நிவி. வா" என்றேன்

பூரணியின் வீட்டிற்கு சென்றோம். பூரணி ஏற்கனவே மிக அழகு.
இப்போது கல்யாணக்களையும் கூடிவிட மிகமிக அழகாக இருந்தாள்.
நாங்கள் இருவரும் அவளை கேலியும் கிண்டலும் செய்ததில் கொஞ்சம் கோபமும் நிறைய வெட்கமும் பட்டதில் அவள் முகம் இன்னும் சிவந்து தங்கம் போல் ஜொலித்தது. நகைகள் மற்றும் அலங்காரம் அவளுக்கு மேலும் அழகை கூட்டியது. தேவதை போல் ஜொலித்தாள். மாப்பிள்ளையும் மிகவும் அழகாக கம்பீரமாக அவளுக்கு பொருத்தமாக இருந்தார்.

இரவு பதினோரு மணிக்குதான் படுக்கைக்கு சென்றோம். பூரணியின் அம்மா "நல்லா படுத்து தூங்குங்க. அப்பதான் காலைல நல்லா ஃப்ரஷ்ஷா இருக்கும்" என்று கூறிவிட்டு சென்றார். நாங்கள் படுத்துக்கொண்டோம். மிகவும் சோர்வாக இருந்ததால் பூரணியும் நிவியும் நல்லாதூங்கிட்டாங்க. ஏனோ எனக்கு உறக்கம் வரவில்லை. எழுந்து நாற்காலியில் அமர்ந்தேன். கட்டிலில் தூங்கிக்கொண்டிருந்தவர்களை பார்த்துக்கொண்டே இருந்தேன். இருவரும் ஒரேமாதிரி படுத்துக்கொண்டிருந்தார்கள். இருவரும் ஒரே உயரம். ஒரே நிறம். அவர்களது பாதங்களைப் பார்த்தேன். நான்கும் அழகாக ஒரேமாதிரி இருந்தது. ஆனால் பூரணிக்கு வட்டமுகம். நிவிக்கு சற்றே நீள முகம். பூர்ணிமாவின் கண்கள் நிவியின் கண்களை விட கொஞ்சம் பெரியது. இப்படி அவர்களை பார்த்து ரசித்துக்கொண்டே இருந்தேன். மண்டபம் மிகவும் அமைதியாக இருந்தது. பக்கத்து அறையில் ஏதோ சத்தம் கேட்டது. எழுந்து சென்று பார்த்தேன். பூரணியின் அம்மா அழுதுகொண்டிருந்தார். அவள் அப்பா சமாதானம் செய்து கொண்டிருந்தார்.
நானும் ஆறுதல் சொல்லலாம் என்று உள்ளே சென்றேன். நான் உள்ளே வந்ததைப் பார்த்ததும் அவர்கள் இருவரும் திடுக்கிட்டு எழுந்தார்கள்.
" நீ எப்பமா வந்தே"
"ஆங்கிள் நா வந்து..."
"நாங்க பேசனதையெல்லாம் கேட்டுட்டுயா? இந்த ரகசியம் பூரணிக்கே தெரியாது. நீ தயவுசெய்து அவகிட்ட எதையும் சொல்லிடாதமா" என்றதும் எனக்கு தூக்கிவாரிப்போட்டது.

என்ன நடந்தது? அது என்ன ரகசியம்?
பூரணிக்கு ஏன் தெரியக்கூடாது?
விடை அடுத்த பகுதியில்.........
************************************
Hi
Thank you for reading. Give your comments.

யாரோ     (Completed)Unde poveștirile trăiesc. Descoperă acum