தாய்ப்பாசம்

Start from the beginning
                                    

"உஷா பேர் நல்லா இருக்கு. இனி உஷாவுக்கு நான் தான் ஸ்பான்ஸர். இந்த ஆபரேஷன் செலவு மட்டும் இல்ல இனி அவளுடைய எல்லா செலவும் அதாவது ஸ்கூல்ல இருந்து காலேஜ், கல்யாணம் வரைக்கும் எல்லா செலவும் என் பொறுப்பு."

"ரொம்ப நன்றி டாக்டர். இந்தக் குழந்தை ரொம்ப அதிர்ஷ்டசாலி.
நாங்க குழந்தைய பாக்கலாமா?"

"இல்ல இன்னும் ்போர் டேய்ஸ் ஐசியுல வச்சிருக்கணும். அப்புறம் தான் நீங்க பாத்துக்கணும். இப்போதைக்கு அந்த கிலாஸ் வழியா பாக்கலாம். ஷி இஸ் ஆல்ரைட். டோன்ட் வொரி.”
என்று கூறிவிட்டு எழுந்து சென்றார்.

நீலாவதியும் லஷ்மியும் கண்ணாடி வழியாக உஷாவை பார்த்தனர்.
லஷ்மியின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. கண்களை துடைத்துக்கொண்டாள். சென்று அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தாள். நீலாவதி சிறிது நேரம் அங்கேயே இருந்து உஷாவை பார்த்துக்கொண்டே நின்றிருந்தாள்.

நான்கு நாட்கள் ஐசியுவிலும் பின் ஒருவாரம் வார்டிலும் இருந்த பிறகு உஷா ஒரு வழியாக அன்பு இல்லத்திற்கு வந்து சேர்ந்தாள்.

நாளொறுமேனியும் பொழுதொரு வண்ணமுமாக உஷா வளர்ந்து வந்தாள். லஷ்மி உஷாவை மிகவும் தாய்ப்பாசத்துடன் வளர்ந்து வந்தாள். ஆனால் நீலாவதி கொஞ்சம் கண்டிப்புடன் அன்பும் காட்டி வளர்த்தாள். உஷா அவள் வேலைகளை அவளே செய்ய பழக்கப்படுத்தினாள். எட்டு வயதுலிருந்தே உஷா அவள் உடைகளை அவளே தோய்க்கவும், அறையைப்பெருக்கி சுத்தம் செய்யவும், உலர்த்திய உடைகளை அழகாக மடித்து அடுக்கி வைக்கவும் பழகிக்கொண்டாள். அவளுக்கு பத்து வயது ஆகும்போது ஒருநாள் நீலாவதியின் அறையில்,
"என்ன உஷா இந்த முறையும் நீ தான் ்பர்ஸ்ட் ரேங்கா?"

"ஆமாம் மேடம்.”

"உன் ்பிரண்ட்ஸ் எல்லாரும் நல்லாருக்காங்களா? உன் ஸ்கூல் எப்படி போகுது? எல்லார்கிட்டையும் பார்த்து பழகணும். உங்க ஸ்கூல் வாட்ச்மேன் , அபீஸ்பாய், டீச்சர் ஏன் யாராயிருந்தாலும் சரி எந்த ஆண்களையும் உன்னைத்தொட்டுப்பேச அனுமதிக்ககூடாது. யாராவது உன் உடல் உறுப்புகளை தொட முயற்சித்தாலோ இல்ல பாக்க முயற்சித்தாலோ உடனே விலகி வந்து என்னிடம் சொல்லவேண்டும். என்ன புரிஞ்சுதா?"

"புரிஞ்சுது மேடம். நான் ்பயர் மாதிரி. என்ன யாரும் நெருங்க முடியாது.நீங்க கவலையே படாதீங்க. நான் ஹோம்வொர்க் பண்ணனும், போகட்டுமா"

"ம் போ. நான் சொன்னதை எப்பவும் மறக்காத"
"ஓகே சரி" என்று சிட்டாய் பறந்தாள் உஷா.
இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த லஷ்மி "என்னம்மா சின்னக்கொழந்த அவ. அவ கிட்ட போய் இதெல்லாம் சொல்றீங்க. அவளுக்கு புரியுமா?"
"எல்லாம் புரியும். உன்னவிட அவ விவரமானவ. நீ அவள மத்த கொழந்தைங்க மாதிரி இது வேணும் அது வேணும்னு அடம்பிடிச்சோ அழுதோ பாத்திருக்கியா?"

"இல்ல மேடம். அவ அப்படி இருக்கறதால அவள வளர்க்கறதுல கஷ்டமே இருக்கல. சொன்ன பேச்ச கேட்டுக்குவா குடுக்கற சாப்பாட சாப்பிடுவா. ரொம்ப அறிவு. ரொம்ப பொறும. ரொம்ப அழகு. அவ எனக்கு கிடச்சது என் அதிர்ஷ்டம்."
"அவளுக்கு சாப்பாடு துணி மட்டும் குடுத்தா போதாது. நல்லது கெட்டதும் சொல்லிக்கொடுத்து வளக்கணும் அதுதான் முக்கியம்."
"சரி மேடம். இப்ப எனக்கு புரியுது. நான் போய் வேலைய பாக்குறேன்." என்று கூறிவிட்டு சென்றாள்.

______________********___________

Thanks for reading. Next part will be more interesting. Please wait......

யாரோ     (Completed)Where stories live. Discover now