குழந்தை

Start from the beginning
                                    

அந்த மேடம் " சார் இந்த ஹாஸ்பிடல்ல எங்க குழந்தைங்களுக்கு ப்ரீயா எல்லா ட்ரீட்மென்டும் ஒரு சேவையா நீங்க செய்யறீங்க. வர்ர டாக்டர் எவ்ளோ பீஸ் கேப்பாறோ தெரியல. இங்க இருக்கற எல்லா கொழந்தைகளுக்கும் அடிப்படை தேவைகளான சாப்பாடு துணிமணி படிப்பு கிடைக்கறதுக்கே நாங்க ரொம்ப கஷ்டப்படுகிறோம். இந்த செலவ எப்படி சாமாளிக்கப்போறமோ தெரியல. அந்தக்குழந்தையை நல்லபடியா காப்பாத்திடுங்க டாக்டர் ப்ளீஸ்"என்றார். அவர் பெயர் நீலாவதி. அவர்களுக்கு சுமார் முப்பது வயது இருக்கும். இருபது வயதில் இந்த அன்பு இல்லத்தை துவங்கினார். இன்று வரை சில நல்ல உள்ளங்களின் உதவியுடன் நன்றாக நடத்திக்கொண்டிருக்கிறார். திருமணம் செய்து கொள்ளவில்லை. சேவைக்காக தன் வாழ்வை அர்பணித்துவிட்டார்.

சிறிது நேரத்தில் ஒரு டாக்டர் வந்தார். குழந்தையின் ரிப்போர்ட்ஸ் எல்லாத்தையும் பார்த்தார்.

பிறகு இரண்டு டாக்டர்களும் சிறிது நேரம் டிஸ்கஸ் செய்து விட்டு வெளியில் வந்தனர்.
புதிதாக வந்த டாக்டர் " டோன்ட் வொரி. பேபி வில்பிகம் ஆல்ரைட். டுமாரோ சர்ஜரி " என்று கூறிவிட்டு பரபரப்பாக சென்று விட்டார்.

பிறகு டாக்டர் வர்கிஸ் வந்து " இந்த டாக்டர் பெயர் சிதம்பரம். பெரிய ஹார்ட் சர்ஜியன். சக்ஸஸ்புல்லா நிறைய ஆபரேஷன்ஸ் பண்ணியிருக்கிறார். கண்டிப்பா இந்த குழந்தையையும் காப்பாத்திடுவார். சதாரணமா இந்த ஆபரேஷன் பண்ணனும்னா ஒரு லட்சம் பணம் தேவைப்படும். ஆனா எல்லாத்தையும் ப்ரீயா செய்யறதா சொல்லிட்டார். நீங்க இனி கவலைப்பட தேவையில்லை" என்றார்.

மறுநாள் ஆபரேஷன் நடந்தது. நீலாவதி வெளியில் காத்துக்கொண்டிருந்தார். டாக்டர் சிதம்பரம் வெளியில் வந்து "ஆபரேஷன் சக்ஸஸ். பேபி வில்பி ஆல்ரைட்." என்று கூறிவிட்டு திரும்பவும் உள்ளே சென்றார்.

"மேடம் நம்ம ஹோமுக்கு புதுசா கொழந்த வந்துருச்சி. நான் தான் இந்தக்குழந்தய பாத்துக்குவேன். இனி அது என் குழந்தை. ஆனா பாப்பாக்கு என்ன பேர் வக்கலாம். பேசாம நீலாவதினு உங்க பேரையே வச்சிரலாமா"என்று படபடவென்று லஷ்மி சத்தமா பேசவும், " உஷ் உஷ் இது ஹாஸ்பிடல்" என்று வாயில் விரல் வைத்து காண்பித்தார் நீலாவதி.

"பேர் தானே கேட்டேன். அதுக்கு ஏன் நல்லபாம்பு மாதிரி உஷ் உஷ்ன்றீங்க"

"உஷ் உஷ்."

"திரும்பவும் உஷ்ஷா. என்னம்மா. ஆங்.... உஷா ன்னு பேர் வச்சிரலாமா. என்ன சொல்றீங்க"

"உஷா. பேர் ரொம்ப நல்லா இருக்கு. அப்படியே வச்சிரலாம்"

லஷ்மிக்கு ரொம்ப சந்தோஷம். அவள் அன்பு இல்லத்தில் தங்கியிருக்கிறாள். குழந்தை இல்லை என்ற காரணத்தால் இவள் புருஷன் இவளை விரட்டி விட்டு வேறு ஒரு பெண்ணைத்திருமணம் செய்து கொண்டான். அவளுக்கு தாய்தந்தையும் இல்லை. ஆதரவின்றி தவித்த அவளுக்கு நீலாவதிதான் அன்பு இல்லத்தில் அடைக்கலம் தந்தார். இன்று அன்பு இல்லத்தில் எல்லா குழந்தைகளுக்கும் லஷ்மி தாய்போல் சேவை செய்கிறாள்.
    
      *************

குழந்தை உஷா என்ன ஆனாள் என்று அறிய காத்திருங்கள்.
Thank you for reading and voting.

யாரோ     (Completed)Where stories live. Discover now