மனமே நீ மாறிவிடு - 2

253 20 8
                                    

வலிகளுக்கு மட்டும் அல்ல, எல்லா வியாதிகளுக்கும் உடலை விட மனம்தான் முக்கிய காரணம் அல்லது சிக்கல் மனதில் தொடங்கி உடலில் முடிகிறது என்று சொல்லலாம். சிந்தனையால், ரசாயன மாற்றத்தால் மட்டும் வலிகளும் உபாதைகளும் நிகழ வேண்டும் என்ற அவசியம் இல்லை. பதற்றம் கூட விபத்து ஏற்படக் காரணமாகலாம்; சில ஆபத்துகளை நோக்கிச் செல்லவைக்கலாம்; வெளியிலிருந்து வரும் கிருமியைத் தடுக்கும் சக்தியை இழக்கலாம். மன அளவிலான வியாதித் தடுப்பை 'சைக்கோ இம்யூனிட்டி' (itha naan nalla search search pannittu thaan ungalukku idha solrean) எனச் சொல்கின்றனர். மனைவியை இழந்தவர்கள் பலர் மிக விரைவில் நோய்வாய்ப்பட்டு இறப்பதைப் பார்க்கிறோம். அதே நேரம் மிகவும் நோய்வாய்ப்பட்ட தாய், தன் பிள்ளைகளுக்காக உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு போராடுவதையும் பார்க்கிறோம். உயிரைக் காக்க நினைப்பதும் துறக்க நினைப்பதும், நம் ஆரோக்கியத்தை மட்டும் அல்ல; வாழ்க்கையையே பாதிக்கும். 'கில்லி'யிலும் 'துப்பாக்கி' படத்திலும், இளைய தளபதி விஜய் க்ளைமாக்ஸில் கையை, காலை உதறி உயிர் பெற்று எதிரியைத் தாக்குவதும் இந்த சைக்கோ இம்யூனிட்டியால்தானே!

'எல்லா டெஸ்ட்டும் செய்தாகிவிட்டது. எல்லாம் நல்லா இருக்குன்னுதான் ரிசல்ட் வருது. ஆனா, வலி கொஞ்சம்கூட குறையல' என்று யாராவது சொன்னால், அந்த வலிக்கு ஆதாரம் மனப்பிரச்சனை எனப் புரிந்து கொள்ளுங்கள். பலர் டாக்டர் மேல் டாக்டர்களாகப் போய்ப் பார்ப்பார்கள். அவர்களாகவே, 'ஒரு சி.டி ஸ்கேன் எடுத்துப் பார்த்துடலாமா டாக்டர்?' என்றும் கேட்பார்கள். வலி சரியாகவில்லை என்றால், வேறு டாக்டரைப் பார்க்கப் போவார்கள். இதை 'டாக்டர் ஷாப்பிங்' என்று சொல்வோம். எந்த டாக்டரிடமும் திருப்திப்பட மாட்டார்கள். 'அவர் சரியாக பார்க்கலை' என்று குற்றம் சொல்வார்கள் தங்கள் வலி யாராலும் சரிசெய்ய முடியாதது என்று பெருமைப்படும் அளவுக்கு வலிப்பற்று கொண்டிருப்பார்கள். மருத்துவர்களும் அவரவர் இலாகாவான நரம்பு மண்டலம், கண், பல் எனப் பார்த்து ஓய்ந்துப்போய் 'Actually you are all right!' என்பார்கள். நம் 'வலி'யவர் அதற்குள் அடுத்த டாக்டரிடம் address விசாரித்துக் கொண்டிருப்பார்!

You've reached the end of published parts.

⏰ Last updated: Aug 26, 2016 ⏰

Add this story to your Library to get notified about new parts!

கேட்பதற்கு மனம் இருந்தால் சொல்வதற்கு நான் இருக்கிறேன். Where stories live. Discover now