மனமே நீ மாறிவிடு

463 26 21
                                    

நம் கவலைகள் பலவற்றுக்கு யாரையாவது காரணம் சொல்வோம். 'அந்த ஒருவரால், அல்லது சிலரால்தான் எல்லாப் பிரச்சினையும்' என்போம். 'அவர்கள் மாறினால் எல்லாம் சரியாகும்' என்று சத்தியம் செய்வோம். பிறர் மாற எல்லா முயற்சிகளையும் எடுக்கிறோம். என் பயிற்சி வகுப்புகளுக்கு வரும் பலர் தவறாமல் கேட்கும் கேள்வி, 'இதை எல்லாம் முதலில் எங்க பாஸூக்கு சொல்லித்தர முடியுமா,' 'இதை வைத்து என் மனைவியின் குணத்தை மாற்ற முடியுமா?', 'என் குழந்தைகள் இதை எல்லாம் புரிஞ்சுப்பாங்களா? அவங்களுக்கு எப்படி புரியவைப்பது?'

நாம் எல்லாருமே பிறரை மாற்ற வழிமுறைகளை தேடிக்கொண்டிருக்கிறோம். கடவுள் முதல் கடைக்காரர் வரை எல்லோரிடமும் இதைத்தான் விசாரித்துக்கொண்டிருக்கிறோம். எல்லா உறவுப் பிரச்சினைகளுக்கும் காரணம் நம் எதிர்ப்பார்ப்புகள்தான்.

சென்ற வருடம் ப்ளஸ் டூ ரிசல்ட் வந்தபோது, தெரிந்தவா் ஒருவர் என் அப்பாவின் தொலைப்பேசியில்  அவசரமாக அழைத்தார். 'பொண்ணுக்கு மார்க் குறைஞ்சுபோய் வீட்டில் ஒரே ரகளை. கையை வெட்டிக்கிட்டு, ஆஸ்பத்திரியில் சேர்த்து, இப்பத்தான் டிஸ்சார்ஜ் செஞ்சு வீட்டுக்கு போயிட்டிருக்கோம். உங்களை உடனே பார்க்கனும்' என்று மூச்சிரைத்தாா்.
அடுத்த ஒரு மணி நேரத்தில் குடும்பமே வந்தது. பிளஸ் டூ எழுதிய பெண் துள்ளிக்கொண்டு வந்தாள். பின் வந்த அம்மா கையில் கட்டு. மகள் மதிப்பெண் குறைவாக வாங்கியதில் மானம் போய்விட்டதாம். கையை அறுத்துக்கொண்டது மகள் அல்ல தாய்.

இதையும் மிஞ்சிவிட்டார் இன்னொரு தந்தை. 'அவளுக்கு நீங்க டீம் ஒர்க், மோட்டிவேஷன், ஸ்ட்ரெஸ் மேனேஜ்மென்ட் எல்லாம் சொல்லித்தரணும். அக்காடமிக்ஸ் தவிர, நாலு கிளாஸ் போறா. ஆனா, இன்னமும் அவளை காம்பிடேட்டிவாக நான் எதிர்பார்கிறேன்...' என்று அடுக்கியவரிடம், 'பெண்ணுக்கு என்ன வயது?' என்று கேட்டேன். "எட்டு" என்றார்.

தற்கொலைகள் முதல் ஆணவக் கொலைகள் வரை அனைத்துக்கும் எதிர்பார்ப்புகள்தான் காரணம். துருப்பிடித்த எதிர்பார்ப்புகளை வைத்துக்கொண்டுதான் இத்தனை சேதாரங்கள் செய்துக்கொண்டிருக்கிறோம்.

கேட்பதற்கு மனம் இருந்தால் சொல்வதற்கு நான் இருக்கிறேன். Where stories live. Discover now