அத்தியாயம் 45

Comenzar desde el principio
                                    

ஒரு பாட்டில் பீர்ர ஒரே மூச்சுல குடிக்கற குடிகாரன் நீ... நீ எங்களை குடிக்க வேண்டாம்னு சொன்னியா ... மவனே ...

தான்வி , இவன் வந்து அகிகிட்ட என்ன கேட்டான் தெரியுமா...? உன்ன இவன் லவ் பண்றதா உன்கிட்ட  சொல்லி, உன் சம்மதத்தை வாங்கி கொடுக்க சொன்னான்... அதான், நீயே சொல்லு டா என்று நாங்க சொன்னதுக்கு ,லவ்க்கு கூட ஹெல்ப் பண்ணாத நீங்க எல்லாம் ஒரு நண்பர்கலான்னு? சார் கோவிச்சிட்டு போனாரு.

அடப்பாவி என்று தான்வி விஷ்ணுவை பார்த்து முறைக்க , அவளைப் பார்த்து அசட்டுச் சிரிப்பொன்றை பதிலளித்தான் விஷ்ணு.

இவன் கல்யாணத்துக்கு  அங்கிள் ,ஆன்ட்டி , நம்ம பாட்டி, கௌஷிக் அண்ணா, அகி, நாங்கன்னு எல்லாரும் ஹெல்ப் பண்ணிட்டோம், ஆனா  சார் லவ் ப்ரோபோசல் கூட பண்ண மாட்டாராமா...

அப்போ... இன்னிக்கு ... அகி... அந்த மாப்பிள்ளை... தான்வி புரிந்தும் புரியாமலும் வினவ..

இவன் தான்... உனக்கு surprise கொடுக்கராறாம... வந்து நின்னுட்டு உன்னிடம் பேசவே பயந்து செத்தான். எப்படியோ தைரியம் கொடுத்து ப்ரோபோஸ் பண்ண வெச்சோம்... ஒரு அண்ணனா சொல்றேன் இவன் உனக்கு கண்டிப்பா வேணுமான்னு... ?ஒரு தடவைக்கு  பல தடவை யோசிச்சுக்கோ....

டேய் பாவி... வாயமூடுடா... என்று விஷ்ணு அலற 

அகி சொன்னதுல என்ன தப்பு... surprise கொடுக்கற முகரகட்டைய பாரு... நான் எவ்ளோ பயத்துல இருந்தேன் தெரியுமா? ... என்றபடி விஷ்ணுவின் முடியை பிடித்து ஆட்ட ஆரம்பிக்க , விஷ்ணு  வலியில் கத்த , அங்கு அதைக்கண்டு அனைவரும் சிரிக்க ஆரம்பித்தனர்.

அதே நேரம் சிரிப்போடு  மீரா கௌஷிக்கை நோக்க  அவனும் கண்சிமிட்டாமல் இவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவனது அந்த பார்வையில் அவள் முகம் சிவந்தது. அதே நேரம் மனதில் அழுத்திக் கொண்டிருந்த பாரமும் விலகியது.

கௌஷிக் என்னை தான் விரும்புகிறான். அர்ஜுன் ஏதோ தெரியாமல் ,புரியாமல் பேசிவிட்டார். என் கௌஷிக் மனது எனக்கு தெரியாதா... அதை உணர்ந்தும்  மனதை குழப்பிக் கொண்டேனே... பைத்தியம் தான் நான்... என்று மனத்தில் தன்னையே திட்டிக் கொண்டாள்.

எனக்காகவே பிறந்தவள்Donde viven las historias. Descúbrelo ahora