அத்தியாயம் 42

Zacznij od początku
                                    

ஏன்? காலைல கேட்ட கேள்விக்கு பதில் சொல்லலாம்ல ..?

என்ன கேள்வி? என்று புரியாமல், அவனை குழப்பத்தோடு பார்த்தாள்.

என்ன அதுக்குள்ள மறந்திடுச்சா ?

ம்ம்ம்...என்ன கேட்டீங்க காலைல...?

உண்மையாவே  நியாபகம் இல்லையா ...? யோசிச்சு பாரு..

ஒரு நிமிடம் யோசித்தவள் ..நோ ...எனக்கு ஏதும் நீங்க கேள்வி கேட்டதா நியாபகமே இல்லை.

ஒஹ்..இரு ...அப்போ நானே உனக்கு நியாபகப் படுத்தரேன் என்றவாறு வேகமாக அவள் அருகில் போக .

அவன் வரும் வேகத்தில் எங்கே தன் மேல் இடித்து விடுவானோ என்ற பயத்தில் அவள் பின்னால் போய் சுவற்றில் மோதி நின்றாள்.

அது அகிலனுக்கு இன்னும் வசதியாக போக , அவள் அருகில் வந்து ஒரு கையை சுவற்றில் ஊன்றி அவள் முகம் நோக்கி குனிந்தான்.

எ..எ..என்ன பண்றீங்க ...? அவனது இத்தனை நெருங்கிய அருகாமை அவளது இதயத்துடிப்பை  எகிற செய்தது.

உன்கிட்ட அந்த கேள்விய கேக்க வந்திருக்கேன்.

அதா கொஞ்சம் தள்ளி நின்னு கேட்கலாமே!!!!

கேட்கலாம் தான், ஆனா இப்படி கேட்க தானே என் மனசு விரும்புது என்று அவளது மூச்சுக் காற்று படும் தூரத்தில் தன் முகத்தை அருகில் வெய்த்து சொல்ல....

அவனது சிவந்த அதரங்கள் இவளது வார்த்தைகளை கட்டிப் போட்டது. கண்கள் அவனது உதட்டுக்கும் , அவனது கண்களுக்கும் மாறிமாறி அலை பாய , இதுவரை அவள் அனுபவித்திடா ஒரு உணர்வு நிலையில் தத்தளித்தாள்.

அவளது நிலை புரிந்தவன் , மேலும் அவளை சீண்டும் விதமாய் இன்னும் தன் முகத்தை அவள் அருகில் கொண்டு சென்றவன் , கேகட்டா அந்த கேள்விய? என்று அவள் கண்களை நோக்கினான்.

ஒரு சென்டி மீட்டர் தூர இடைவெளியில் இருந்த அவனது முகம் அவளை ஸ்தம்பிக்க செய்தது. அவனது மூச்சக் காற்று அவளது மூச்சோடு கலந்தது.

இன்னும் போதாதவனாய் அவளது இடுப்பை தொட்டும் தொடாமல் தன் இன்னொரு கையை சுவற்றில் ஊன்ற, அது ஏற்படுத்திய கிளர்ச்சியில் சிவா சுய உணர்வுக்கு வந்தாள்...

எனக்காகவே பிறந்தவள்Opowieści tętniące życiem. Odkryj je teraz