அத்தியாயம் 40

Start from the beginning
                                    

இன்று இப்படி ஒரு சந்தர்ப்பம் வந்தவுடன் மனம் சந்தோஷத்தில் மிதந்தது.இருந்தாலும் "காரியமாக தான் செல்கிறேன், அவளை பார்க்க அல்ல" என்று அவனுக்கு அவனே சமாளித்துக் கொண்டான்.

ஆனால் வீட்டிற்க்கு வந்து அகிலனை பார்த்தவுடன் மனம் சுணங்கியது. மீரா என்னவள் இல்லையே என்ற எண்ணம் வலித்தது.அந்த கணப் பார்வை போதும் என்ற நிறைவில் அவளிடம் எதும் பேசாது சென்றான்.

என்ன பார்வை உந்தன் பார்வை
இடை மெலிந்தாள் இந்தப் பாவை
மெல்ல மெல்ல பக்கம் வந்து
தொட்ட சுகம் அம்மம்மா....ஆ..

என்று  சிவா மீராவை ஒட்டி நின்று கொண்டு மெதுவாய் ராகம் இழுக்க...

போடி எரும என்ற படி மீரா அங்கிருந்து முகம் சிவக்க ஓடிவிட்டாள்.

வெட்கப்படாதீங்க அண்ணி என்று தான்வியும் மீரா வை பின்தொடர்ந்து சென்றுவிட, அவர்களை தொடர நகர்ந்த சிவா வை அகிலன் குரல் நிறுத்தியது.

இனி தயவு செஞ்சு என்னைக்கும் பாடீராத மா... கேக்க முடியலை....

அவனின் கிண்டலில் தோன்றிய கோபத்தை அடக்கியபடி உதட்டை சிரிப்பது போல வைத்துக் கொண்டவள் " thanks for your advice sir" என்றுவிட்டு நகர முனைந்தாள் .

Sir ahh???? என்று பின்னால் அவனது கேள்வி காதில் விழுந்தும் கண்டுக்காதவளாக அங்கிருந்து நடந்தாள்.

பதில் சொல்ட்ராலானு பாரு... உன்ன அப்பறம் வெச்சுக்கரேன் டி என் நாட்டுக் கோழியே ... என்று மனதில் நினைத்து சிரித்தபடி அகிலனும் தன் அண்ணனை நோக்கி நடந்தான்.
.
.
.
பாட்டியிடமும் வந்திருந்தவர்களிடமும் நல விசாரிப்பு முடிந்த போது ,  vegetable soup வந்தது... அதை அவர்கள் எடுத்துக் கொண்டு பேச ஆரம்பித்தனர்.

மீரா , சிவா , தான்வி மூவரும் அந்த பெரிய ஹாலில் ஆண்களை விட்டு தள்ளி போட்டிருந்த சோஃபாவில் அமர்ந்து  கொண்டு கையில் newspaper , அல்லது மொபைல்  என்று எடுத்து வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தாலும், அவர்கள் காது என்னவோ " என்ன பேசிக் கொள்கிறார்கள்"  என்று  கவனிக்க ஆரம்பித்தது..

எனக்காகவே பிறந்தவள்Where stories live. Discover now