அத்தியாயம் 39

Start from the beginning
                                    

என்றபடி தான்வி அவனை நோக்கி சென்றவள் அவனிடம் பேச ஆரம்பித்தாள். பின்பு அவன் முன்னால் நடக்க மீரா சிவா இருவரையும் அழைத்துக் கொண்டு அவன் பின்னால் சென்றாள் தான்வி.

யாரு தான்வி இது Arnold ஓட cousin brother மாதிரி இருக்கான்? என்று சிவா தான்வியின் காதை கடித்தாள்.

இவரு தான் mugunth... "Hope" security service ஓட MD ... நமக்கு இவங்க தான் security கொடுக்கறாங்க... India ல இருக்க top most security services ல இவங்களும் ஒருத்தங்க... மும்பை ல இவங்க தான் number 1 . அதுமட்டும் இல்லாமல் இவங்க கேசவன் uncle ஓட மருமகனும் கூட.
அதான் கௌசிக் அண்ணா இவங்களை செலக்ட் பண்ணி இருக்காரு.

Oh...

இப்போ அகி வரான்ல அதான் அவனை welcome பண்ண வந்திருக்காங்க.

சரி சரி... என்றவாறு உள்ளே நடந்தனர்.

15 நிமிடத்தில் flight வந்துவிட அடுத்த 10 நிமிடத்தில் அகிலன் வெளியே வந்தான்.

அவனை கண்டவுடன் ஓடிப்போய் அணைத்துக் கொண்ட தங்கையை ஒரு பெரிய புன்னகையோடு அவனும் அணைத்துக் கொண்டான்.

இவ்வளவு நேரம் இவன் என்ன பெரிய அப்பாட்டக்கரா... இவன பார்க்க நான் ஏன் தயங்கனும்... என்று என்னவெல்லாமோ சொல்லி தேத்தி இருந்த மனசு அவனை கண்டவுடன் குட்டிக் கர்ணம் அடிக்க ஆரம்பித்தது.

தான்வி காட்டிய போட்டோவில் எல்லாம் இவனை பார்த்தவள் தான். ஏன் அன்று கூட லேப்டாப்பில் கண்டாள் தான்.. ஒருவேளை அன்று கோவத்தில் நன்றாக பார்க்கவில்லையா? ...

ஏனெனில் இன்று.... இன்று.... எப்படி இவ்வளவு அழகாக தெரிகிறான் அவளுக்கு? என்று அவனை விட்டு விழியை நகர்த்த கூட நினைவில்லாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

போட்டோவில் கொஞ்சம் கொழுக் மொழுக் கென்று இருந்தவன் இதோ இன்று இளைத்து இருந்தான். இளைத்து என்பதை விட கட்டுடலோடு இருந்தான் என்பதை அவன் போட்டிருந்த பிரவுன் t-shirt டில் தெரிந்த முறுக்கேறிய கைகளில் தெரிந்தது.

வெளிநாட்டு வாசம் அவனது மாநிறத்தில் மினுமினுப்பை அதிகப்படுத்தி காட்டியது ..

எனக்காகவே பிறந்தவள்Where stories live. Discover now