அத்தியாயம் 38

Start from the beginning
                                    

இந்தியா அளவுல விரல் விட்டு எண்ணக் கூடிய பணக்காரங்க பட்டியல்ல நம்மளும் இருக்கோம்.இதுக்கு எல்லாம் காரணம் கௌசிக்... இந்த சொத்து பத்து எல்லாமே அவனோடது தான்.
அவனால வந்தது தான்.

சரி இது எல்லாம் எங்களோடதுன்னு  அவனுக்கு உரிமை இல்லைன்னு நினைக்கரான்... சொல்லப்போனா அவங்க அப்பன் கிட்ட இவன் கொடுத்த வாக்கே அது தான் ... என்று ஃப்ளாஷ்பேக் கை நினைத்துப் பார்த்தார்

கௌஷிக் கண்ணா இனி உனக்கு எல்லாமே இவங்க எல்லாரும் தான்... அவங்களுக்காக உன் உயிரை கூட குடுக்க தயங்ககூடாது... உன்னால அவங்க குடும்பத்துல எந்தவிதமான சஞ்சலமும் வரக்கூடாது... அதே மாதிரி அவங்களோட காசு பணம் இது எதுக்கும் நீ ஆசைப்படக்கூடாது... இதெல்லாம் மீற மாட்டேன்னு எனக்கு வாக்கு கொடு கௌஷிக்...


மரணப் படுக்கையில் கௌசிக் கின் அப்பா மாதவன் கௌசிக்கிடம் வாங்கிய சத்தியம் இது ..

காசுக்காக அங்க போகலை அவன் ...  அவன் நினைச்சா இங்கேயே புதுசா தொழில் தொடங்கி ஜெய்க்கவும் செய்வான் . ஆனா நம்ம எல்லாரையும் விட்டுட்டு போக நினைக்கரான்.

உண்மை தான் மா... அதை தடுக்க தானே நாம முயற்சி பண்றோம்... ஆனா அதும் சரி வரலை போலயே ..

ம்ம்... நம்ம கடைசி முயற்சி மீரா தான்... அவன் கல்யாணம் பண்ணிட்டு foreign போய்ட்டா கூட எனக்கு மனசு நிம்மதியா இருக்கும்... என்ன நடக்கப் போகுதோ.

எப்போ அகிலன் வருவான் ...எப்போ எல்லாத்தையும் அவனிடம் ஒப்படச்சிட்டு இங்கிருந்து போவோம்னு காத்திட்டு இருக்கான் மா கௌசிக்.

ஏதாவது பண்ணி கௌசிக் மனச மாத்து மா தாயே  என்று அம்பிகா பாட்டி தனது வேதனையை இறைவனிடம் பகிர்ந்தார்.
.
.
.
இரண்டு நாட்களாய் வெளியே சுத்துவதே வேலையாய் இருந்தது மீரா, சிவா, தான்வி மூவருக்கும்.

இப்பொழுது கூட juhu beach இல்  கரைகளில் வந்து மோதும் அலையின் நுரைகள் காலில் படாதவாறு அவைகளுடன் மூவரும் ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தனர்.

எனக்காகவே பிறந்தவள்Where stories live. Discover now