அத்தியாயம் 35

Start from the beginning
                                    

எந்த time க்கு வர்ரா? நா...நான் free ah இருந்தா கூப்பிட்டு வர்றேன்..

அவர் விவரம் சொல்ல...

சரி நான் பார்த்துக்கறேன் என்றதோடு போனை வைய்த்தான்...

எந்த நேரமாக இருந்தாலும் கௌசிக் மீராவை அழைத்துவர போயிருப்பான் என்பது கௌசிக் மற்றும் அம்பிகா இருவருக்குமே தெரிந்திருந்தது... நமக்கும் கூட இல்லையா!!!

இரண்டு வாரங்கள் ஆகி விட்டது , மீரா வை பார்த்து... அன்று தனது வீட்டுக்கு போவதாய் அவள் சொல்லி விட்டு சென்ற போது பார்த்தது... அவள் குரலை கேட்டது...

அதற்கு பின்பு வீட்டுக்கு வந்த அம்பிகா பாட்டி ,மீரா வீட்டில் பேசியதாகவும் , அகிலனை அவர்கள் அனைவருக்கும் பிடித்து விட்டதாகவும் ,கல்யாணத்திற்கு okay சொல்லிவிட்டதாகவும் சொன்னார்

மீராவின் சம்மதம் பற்றி அம்பிகா சொல்லவில்லை என்றாலும் , தன் குடும்பத்து மனிதர்கள் ஒத்துக் கொண்டால் கண்டிப்பாக மீரா இந்த கல்யாணத்திற்கு சம்மதித்திருப்பாள் என்பது தெரியும்.

எதிர்பார்த்தது இதை தான் என்ற போதும் ஏனோ மனம் அதை ஏற்க விரும்பவில்லை... எங்கே இங்கே இருந்தால் எதேனும் தானே ஏடாகூடமாய் செய்து விடுவோம் என்ற பயத்தில் சீக்கிரமாக கோவையில் வேலைகளை முடித்தவன் ,அடுத்து நான்கு நாட்களில் மும்பை வந்து சேர்ந்தான்.

ஆனால் இன்று ....

இவன் நினைத்திருந்தால் போகமால் இருக்கலாம் தான்... ஆனால் ஏனோ அப்படி இருக்க முடியவில்லை... அவளை பார்க்க வேண்டும் என்ற ஏக்கமே இதற்கு காரணம் என்று புரிந்தாலும் , அதை வெளியில் காமித்துவிட கூடாது என்ற முடிவில் வேலையில் ஈடு பட ஆரம்பித்தான் ஒரு சந்தோஷ உணர்வோடு.

மதியம் 1:30 ...

1:45 க்கு வர வேண்டிய ட்ரெயின் க்காக  Lokmanya Tilak இரயில்வே ஸ்டேஷன் வந்தவன் platform ticket எடுத்துக் கொண்டு அங்கிருந்த கல் மேடையில் அமர்ந்தான்...

சுற்றிலும் பேச்சுக் குரல்கள் பல மொழிகளில் கேட்டுக்கொண்டிருந்தது.
எங்கு சென்றாலும் flight இல் சென்று விடுவதால்,  வருடங்கள் பல ஆகிவிட்டது இவன் இரயில்வே ஸ்டேஷன் பக்கம் எல்லாம் வந்து.

எனக்காகவே பிறந்தவள்Where stories live. Discover now