அத்தியாயம் 31

Start from the beginning
                                    

You know விஷ்ணு, Don't judge a book by it's cover ன்னு உன்னை மாதிரி ஆளுக்காக தான் சொல்லி இருக்காங்கன்னு நினைக்கறேன்.
ஒருத்தரோட தோற்றமும், அவங்க போட்டு இருக்க துணியும் அந்த நேரத்துல அவங்க இருக்க சூழ்நிலையை பொறுத்தது. அதை எந்த நேரத்துல ,எந்த சூழ்நிலைக்கு ஏற்றவாறும் மாத்திக்களாம். But character... That's what we should look for..

அந்த மாதிரி பார்கரப்போ மீரா is a pure soul... அவளோட மனசு ரொம்ப அழகானது, தூய்மையானது... So... அகி... அகிலனுக்கு மீரா எல்லா விதத்திலும் பொருத்தமானவளாக இருப்பா...

என்று அழுத்தமாய் பேசியவன் , கடைசி வாக்கியங்களில் தொண்டை கமர ,அங்கிருந்த இருவரையும் பார்த்து விட்டு அகன்றான்...

கௌசிக்கின் பேச்சில் சிலையாய் அமர்ந்திருந்த விஷ்ணு வை , பாட்டி ஒரு புன்னகையோடு கலைத்தார் .

விஷ்ணு...

பாட்டி ... தப்பா சொல்லிட்டேன் ல...

இல்ல கண்ணா...நீ உன் மனசுல பட்டத தான் சொன்ன...

ஆனா கௌசிக் அண்ணா சொன்னது தானே கரெக்ட் .

ம்ம்...உண்மை தான் .. கௌசிக் மனுஷங்களை எடைபோட தெரிஞ்சவன், நிறைய விஷயங்களை ஆராய்ந்து முடிவு எடுக்க கூடியவன்... அதான் தெளிவா இருக்கான்... நீ இன்னும் நிறைய கத்துக்கணும் ..

ம்ம்... உண்மை தான் .. என்று ஒத்துக்கொள்ள... அவன் தலையை தடவியவரின் உள்ளம் மகிழ்ந்து இருந்தது ,கௌசிக் கிற்க்கு மீரா வின் மேல் இருக்கும் புரிதலை கண்டு ..

ஆனால் புத்திசாலி, தெளிவானவன் என்று அவர் நினைக்கும் கௌசிக் எடுக்கப்போகும் முட்டாள் தனமான முடிவை கண்டு அவர் அதிர்ந்து போகப்போவது உறுதி.

இந்த மூன்று நாட்கள் மீரா விற்கு மிகவும் பிடித்தமானதாக இருந்தது... காலையில் ஆபீஸ் சென்று விடுபவள், சாயந்திரம் வந்தவுடன் தான்வி யுடன் சேர்ந்து கொண்டு பக்கத்தில் கோவில் முதல் பேல் பூரி கடைவரை அனைத்தையும் சுத்திப்பார்ப்பது தான் வேலையே...

அத்தனை அழகாக இருந்தாலும் தான் அழகி என்ற எந்த வித அலட்டலும் இல்லாமல் இருப்பது, அவள் போட்டிருக்கும் துணி மற்றும் அவளது நகைகளே அவளது பணக்கார தன்மையை எடுத்துரைத்தாலும் ,அதைக் காட்டிக்கொள்ளாமல் மீராவுடன் ரோட்டுக் கடைகளில் கூட நின்று சேர்ந்து சாப்பிட்ட தான்வியின் எளிமை மீரா வை மிகவும் கவர்ந்தது...

எனக்காகவே பிறந்தவள்Where stories live. Discover now