அத்தியாயம் 28

Start from the beginning
                                    

அதற்கு எந்த பதிலும் இல்லாமல் போகவே அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

சுவற்றில் சாய்ந்து கைகளை மார்புக்கு குறுக்கே கட்டியவாறு இவளையே பார்த்தபடி நின்றிருந்தான் கௌஷிக்.

எச்சியை கூட்டி முழுங்கியவள்... , "கௌசிக்... I am sorry... நான் அன்னிக்கு உன்னிடம் சொல்லாமல்....."

ஸ்டாப் இட் மீரா... எதுக்காக என்னிடம் சாரி கேட்கற? This is your life... நீ என்ன வேன்னாலும் பண்ணலாம், யாரு கூட வேண்டும் என்றாலும் பேசலாம்,யாரை வேண்டுமானாலும் நம்பலாம் ... that's your decision... அப்படி இருக்கறப்ப என்னிடம் ஏன் நீ .... சொல்லப்போனால் அன்னிக்கு உன்னிடம் சத்தம் போட்டதுக்கு நான் தான் உன்னிடம் சாரி....

என்று எந்த உணர்ச்சியும் வெளியில் காட்டாமல் நின்ற இடத்தில் இருந்து தன் மனதில் இருந்ததை தெளிவாய் அவன் எடுத்துரைத்துக் கொண்டிருக்க

அவன் வார்த்தைகளை பூர்த்தி செய்ய விடாமல் அவனின் அருகில் சென்று அவனின் வாயில் கை வைத்தாள்...

போதும் கௌசிக்... பிளீஸ்... இப்படி எல்லாம் சொல்லி என் மனச இன்னும் கஷ்டப்படுத்தாத.. அன்னிக்கு மட்டும் நீ வரலைன்னா... நான்... நான்.... அதற்கு மேல் பேச்சு வராமல் தன் முகத்தை மூடி அழுதுகொண்டே நிற்க முடியாமல் கால்களை வலதுபுறமாய் மடங்கி அமர்ந்தாள்..

அவளது திடீரென்ற  அழுகையில்  உறைந்தவன், சுதாரித்து அவளை அமைதிப்படுத்த அவளருகில் முழங்காலிட்டு அமர்ந்தான்..

மீரா... மீரா இங்க பாரு ... என்ன குழந்தை மாதிரி அழுதுகிட்டு... என் மீரா தைரியசாலி ஆச்சே என்றவாறு அவளது கைகளை அவளது முகத்தில் இருந்து எடுத்து விட்டான்...

இ..ல்ல .. கௌசி... நான் ஒரு  முட்டாள்... நான் ஒரு முட்டாள் என்று தன் கைகளால் முகத்தில் அறைந்து கொள்ள ..

அவளது கைகளை வேகமாய் தன் கைகளில் வைத்துக் கொண்டு...

ஷ்ஷ்... என்ன பண்ற... என்ன பேச்சு இது.. ம்ம்? 

கௌசிக்... என்னால இன்னும் அந்த நிகழ்விலிருந்து வெளிய வர முடியல... அது நியபகம் வரப்போ எல்லாம் என்னோட முட்டாள்தனத்தை நினைச்சு எனக்கு என்னையே பிடிக்கலை கௌசி...

எனக்காகவே பிறந்தவள்Where stories live. Discover now