அத்தியாயம் 27

Start from the beginning
                                    

மீரா... என்றவாறே சாய்ந்து அமர்ந்து கண்களை மூடினான்..

அவளை கண்டது முதல் நடந்தவை மனதில் வலம் வர ..
அகிலனோடு அவளை சேர்த்து பேசிவதை கூட மனம் வெறுத்து.. எப்படி நான் அவளை விட்டுக் கொடுப்பேன்?
என்னை ஏனடி இப்படி மாற்றிவிட்டாய்?

என்ற கோவத்தோடு அங்கிருந்து மேஜையில் ஓங்கி குத்தினான்..

அவள் என்ன செய்கிறாலோ? என்ற பதட்டம் இருந்தாலும், அவள் கண்டிப்பாக தவறான முடிவு எதும் எடுக்க மாட்டாள் என்பது அவனுக்கு நன்கு தெரியும், அவ்வளவு கோழையல்ல அவள், மேலும் தன் குடும்பத்தை நினைத்து பார்த்தால் கண்டிப்பாக எந்த ஒரு தப்பையும் செய்ய மாட்டாள் என்பது தெரிந்திருந்தது அவன் மனதுக்கு.

இன்று கோவத்தில் அவளிடம் பேசாமல் இருந்தது போல ... இன்னும் மிஞ்சி மிஞ்சி போனால் ஒரு வாரம் , அது வரை அவளிடம் ஒதுங்கி இருந்துவிட்டு அவளை விட்டு முற்றிலுமாக விலகி விட வேண்டும் .

ஏனெனில் அவள் எனக்கானவல் இல்லை... என்னோடு அவள் ... அவள் ...வேண்டாம் ... அவளது எண்ணப்படி அவள் வாழ்க்கை அமைய வேண்டும்... நான் எக்காரணத்தை கொண்டும் அதற்கு தடையாய் இருக்க கூடாது... என்ற ஒரு முடிவோடு இறுகினான்.
.
.
.

இங்கே இவளோ சாப்பிட்டு விட்டு வேலைக்கு விடுப்பு எடுத்தவள், கண்ணாடியின் முன் நின்று தன் முகத்தைப் பார்த்தாள்.. கை விரல் பதிந்து கந்திக் கிடந்தது

தப்பித்தேன் , கீழே லலிதா ஆன்டி வீட்ல யாரும் இல்லை, எல்லாம் குலதெய்வ வழிபாட்டுக்கு ஊருக்கு போயிட்டாங்க , வர இன்னும் நான்கு நாட்கள் ஆகும்.. அதற்குள் இந்த கன்னம் நன்றாக விடும்..
என்ற படியே கன்னத்தை தடவினாள்..

நேற்றைய நிகழ்வுகள் கண்முன் வர ,உடம்பு நடுங்கியது..

கௌசிக் வரவில்லை என்றால்? நினைக்கவே இதயம் அடித்துக்கொண்டது.

அதே நேரம் கௌசிக்கின் பாராமுகம் மனதை வலித்தது ... ஆனால் அவனது கோவத்தை பார்த்ததிலிருந்து அவனிடம் பேசவும் பயமாக இருந்தது...

எனக்காகவே பிறந்தவள்Where stories live. Discover now