3 குறி

1.1K 56 6
                                    

 3 குறி

கல்லூரியிலிருந்து வீட்டிற்கு செல்ல, பேருந்துக்காக காத்திருந்தாள் மதுமிதா. பேருந்து வந்ததும், அதில் ஏறியவள், ஓட்டுனர் இருக்கைக்கு பின்னால் ஒரு இருக்கை காலியாக இருக்கவே, அதில் அமர்ந்து கொண்டாள். பேருந்து புறப்பட்டது. அப்பொழுது ஒருவன், அவர்களது பேருந்தை இருசக்கர வாகனத்தில் கடந்து சென்றான். அவனுடைய இருசக்கர வாகனத்தின் *சைடு ஸ்டாண்ட்* மேலே தூக்கி விடப்படாமல் இருந்ததை கவனித்த அவள், திகிலடைந்தாள். ஏதாவது ஒரு கல்லிலோ அல்லது ஸ்பீட் பிரேக்கரிலோ அந்த சைடு ஸ்டாண்ட் தட்டினால் அவன் நிச்சயம் கீழே விழுவான்.

"அண்ணா, அண்ணா, கொஞ்சம் ஃபாஸ்டா போங்களேன்... அந்த பையன் பைக் ஸ்டாண்ட்டை எடுக்காம போறான்" என்று ஓட்டுநரிடம் கூறினாள் மதுமிதா.

அவளை விசித்திர ஜந்துவை போல் பார்த்தார் ஓட்டுநர்.

"நம்மளால அவனை பிடிக்க முடியாது. நம்ம பஸ்ல போறோம், அவன் பைக்ல போறான். எப்படி அவன் கிட்ட நம்ம போறது?" என்றார்.

"ப்ளீஸ், கொஞ்சம் ட்ரை பண்ணுங்க அண்ணா... அவனுக்கு ஏதாவது ஆயிடப்போகுது"

அவளுக்கு அந்த ஓட்டுநர் பதில் கூறும் முன், திடுக்கிடும் சத்தம் கேட்டு அவர் பிரேக்கை அழுத்தினார். அந்த வாலிபனின் இருசக்கர வாகனத்தின் சைடு ஸ்டாண்ட், ஒரு ஸ்பீட் பிரேக்கரில் தட்டி, அவன் உயரே பறந்து, கீழே விழுந்தான். சாலையை இரண்டாய்  பிரிப்பதற்காக இடையில் வைக்கப்பட்டிருந்த சிமெண்ட் பிரிப்பானில் அவன் தலை மோதியது. ரத்த வெள்ளத்தில் சரிந்தான் அந்த வாலிபன்.

பேருந்தை விட்டு இறங்கி, தலைதெறிக்க ஓடினாள் மதுமிதா, தன் உயிருக்காக போராடிக் கொண்டிருந்த அந்த வாலிபனை நோக்கி. எதிர்புறமிருந்து வந்த ஒரு ஆட்டோவை கையை காட்டி நிறுத்தினாள் அவள், அந்த வாலிபனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் நோக்கில்.

"அவன் செத்துட்டான் பாப்பா" என்றார் யாரோ ஒருவர்.

அதிர்ச்சியுடன் அவனை ஏறிட்டாள்  மதுமிதா. அவள் கண்களில் இருந்து கண்ணீர் அருவி எனப் பொழிந்தது. அங்கு வந்த டிராபிக் போலீசார் கூடியிருந்த மக்களை கலைந்து செல்லும்படி பணித்தார்கள். அந்த வாலிபனின் விதியை பற்றி பேசியபடி மக்கள் கலைந்து சென்றார்கள். அந்த வாலிபனை வலி நிறைந்த பார்வை பார்த்தபடி நின்றாள் மதுமிதா.

கர்வம் அழிந்ததடி...! (முடிந்தது)✔️Where stories live. Discover now