அத்தியாயம் 21

Ξεκινήστε από την αρχή
                                    

ஓ...  என்று குரலில் ஸ்ருதி குறைந்தது...
பின்பு ஏதோ நினைவு வந்தவள் போல...
எஸ் எஸ்... நான் கண்டிப்பிடிச்சுட்டேன்... எந்த தடங்கலும் இல்லாமல் மீரா அண்ணியை தான் கல்யாணம் பண்ணிக்கனும்னு அசைபடறதை உங்க கிட்ட சொல்லணும் நினைச்சிருப்பார்...

அப்டியா சொல்ற? என்று அம்பிகா ஒரு மாதிரியாக சிரிக்க...

ஏன்...உங்களுக்கு அப்படி தோணலையா?...

இல்லை... அவன் கண்டிப்பா  மீரா அகிலன் கல்யாணத்துக்கு ஒப்புதல் தான் கொடுப்பான்..

ஐயோ... என்ன சொல்றீங்க... ஆனா அண்ணா மீரா அண்ணிய லவ் பண்றாங்க தானே...

ஆமா... ஆனா இவன் கௌசிக்... இவனை பற்றி எனக்கு நல்ல தெரியும்... கண்டிப்பா இவனோட மனச நம்ம கிட்ட காட்ட மாட்டான்...

அப்..அப்பறம் என்ன பண்றது..?

அவன் வாயாலேயே அவனோட காதலை சொல்ல வைய்க்கரேன்...

எப்படி...?

அவன் வழியிலேயே போய் தான்!!!!

மாலை வேலை விட்டு வந்து ஒரு குளியலை போட்டு விட்டு சோஃபாவில் அமர்ந்த கௌசிக் இன்னும் சோர்வாக உணர்ந்தான்... உடல் சோர்வை விட மன சோர்வு தான் அதிகமாக இருந்தது... காலையில் அம்பிகா பாட்டி அழைத்ததிலிருந்து ஏதோ ஒரு சங்கட உணர்வோடே சுற்றி கொண்டு இருக்கிறான்...

அவன் மீராவை அகிலனுக்கு பொருத்தமானவள் தானா? என்ற கேள்விக்கு பதில் தேடவே வந்தான்... அது மட்டும் அல்லாது அகிலனுக்கு ஏற்றவாறு அவளை மாற்றவே அவளுடன் நன்கு பழக ஆரம்பித்தான்... ஆனால் இன்று ஏன் இந்த குழப்பம் என்று அவனால் புரிந்தும் எற்று கொள்ள முடியாமல் குழம்புகிரான்.

என்ன ஆச்சு அண்ணா ? உடம்பு சரியில்லயா? என்று விஷ்ணு தன்னை கவனித்து கேக்கும் அளவு தன் மனதை அந்த புரியாத விஷயம் ஆக்கிரமித்து இருப்பதை உணர்ந்து மனதை ஒருநிலை படுத்தினான்...

இதோ வீட்டிற்கு வந்தவுடன் மறுபடியும்  குழப்பம்...

கௌசிக்...

மீராவின் குரல் கேட்க கதவை திறந்தான்..

குளித்தாயிற்றா?  சூப்பர்... வா கீழே பாப்பா வா பார்த்திட்டு வர்லாம்...

எனக்காகவே பிறந்தவள்Όπου ζουν οι ιστορίες. Ανακάλυψε τώρα