பாகம் 46

350 25 23
                                    

🔱அமரனின் சித்ராம்பிக்கை🔱

🔱பாகம் 4️⃣6️⃣

அமராவதியின் அன்னை விசித்ராவின் புகைப்படத்தை பார்த்த விஜயகுமார் நெஞ்சில் கை வைத்துக் கொண்டு மயங்கி கீழே விழுந்தவரை பார்த்து அனைவரும் பதற...

அமரன் - ஐயோ அப்பா அப்பா என்னாச்சு உங்களுக்கு.......அப்பா

சித்ரா - அமரா என்னாச்சு

ஜானகி - அமரா உங்க அப்பாவை இப்படி படுக்க வை.....நான் டாக்டர்க்கு போன் பண்றேன்..

குரேஷி - மச்சான் இருடா.... அப்பாவை இப்படி படுக்க வை

என்று குரேஷி சொல்ல...அமரன் தன் தந்தையை சித்ராவின் அறையில் உள்ள கட்டிலில் படுக்க வைக்க.... ஜானகி மருத்துவரை கைபேசி வாயிலாக அழைத்த அடுத்த சில நிமிடங்களில் மருத்துவர்.. விஜயகுமார் பங்களாவிற்கு வந்தவர் விஜயகுமாரை பரிசோதித்து அவருக்கு ஊசி போட்டவரை கேள்வியோடு அணுகிய அமரன்

அமரன் - டாக்டர் அப்பாவுக்கு என்னாச்சு ஏன் அப்பா திடிர்னு மயக்கம் வந்து விழுந்துட்டாரு..

டாக்டர் - நான் ஏற்கனவே இவருக்கு அதிக படியான மகிழ்ச்சி அதிகமான கவலைன்னு எதையும் அளவுக்கு அதிகமாக ஏற்படாமல் பார்த்துக்கோங்கன்னு சொன்னேன் இல்ல....

ஜானகி - இல்ல அவரு நல்லா தான் இருந்தாரு டாக்டர்.....
ஆனா  இப்போ ஏன் இப்படி...

டாக்டர் - ஏன்... என்னாச்சு bp ரொம்ப அதிகமா இருக்கே...இவரு யாரு

ஜானகி -இவரு தான் அமரன்... விஜயகுமார் ஐயாவின் பையன்

டாக்டர் - ஓ...ஆமா லாஸ்ட் time  நான் இவரை பாக்கும் போது இவரோட பையன் அவுங்க கட்டிக்க போற பெண்ணை அழைச்சிட்டு வராதா சொன்னாரு..இவரு தான் அவரா

அமரன் - டாக்டர் அப்பாவுக்கு என்னாச்சு

டாக்டர் - அவரு எதையோ ஒரு விஷயத்துல ரொம்ப ரியாக்ட் ஆகிருக்காரு... நான் இன்ஜெக்ஷன் போட்டு இருக்கேன்.... இன்னும் கொஞ்ச நேரத்துல கண் விழித்துடுவாரு வெயிட் பண்ணுங்க..

💙AC💙அமரனின்🔱சித்ராம்பிகை💙Where stories live. Discover now