பாகம் 39

Začít od začátku
                                    

என்று சொன்ன அமரன் சித்ராவிற்கு இன்னொரு போர்வையை போர்த்திவிட...சித்ரா குளிரில் நடுங்கி கொண்டு இருக்க..

அமரன் - சித்ரா சித்ரா இங்க பாரு.. ஒன்னும் இல்ல.. பயப்புடாத சித்ரா..இரு டாக்டர் வந்துடுவாங்க

சித்ரா - அழகி ...அமரா ...அழகி எங்க

அமரன் - சித்ரா நீ பதட்டப்படாத.. அழகி பாப்பாவும் அமராவதியும் பக்கத்து ரூம்ல தான் இருக்காங்க..

குரேஷி - மச்சான் ஏன் டா இன்னும் டாக்டர் வரல..

செந்தாமரை - அதோ பெல் அடிக்கிற சத்தம் கேக்குது... இருங்க நான் போய் கதவை திறக்கிறேன்

என்று சொன்ன செந்தாமரை வாசல் கதவை திறந்ததும் மருத்துவர் வந்து இருப்பதை அறிந்தவர் ..டாக்டரை உள்ளே அழைத்து வர

அமரன் - வாங்க டாக்டர்

டாக்டர் - நீங்க தான் call பண்ணிங்களா..

அமரன் - ஆமா டாக்டர்

டாக்டர் - யாருக்கு என்ன ப்ரோப்லேம்

அமரன் - டாக்டர் இவுங்களுக்கு தான் குளிர் ஜுரம் இருக்குற மாதிரி தெரியுது... உடம்பு அனலா கொதிக்குது

டாக்டர் - ம் இருங்க நான் செக் பண்றேன்

என்று டாக்டர் சொன்னதும் அமரன் சித்ராவை தூக்கி கட்டிலில் அமர வைக்க.... சித்ராவோ கண்கள் திறக்க முடியாத நிலையில் கிறங்கி இருக்க .... டாக்டர் சித்ராவை பரிசோதிதத்தவர் covid kit மூலம் அவளை பரிசோதிக்க ...

அமரன்  - என்ன டாக்டர் சித்ராக்கு என்னாச்சு..

டாக்டர் - வெயிட் வெயிட் ரிசல்ட் few mins ல தெரியும்

அமரன் - டாக்டர் சித்ராவுக்கு ஒன்றரை மாத பிள்ளை இருக்காங்க...pls சித்ராவுக்கு ஒன்னும் பெரிய ப்ரோப்லேம் இல்லையே..

டாக்டர் - இந்த மாதிரி சமயத்துல பிள்ளையை இவுங்ககிட்ட இருந்து கொஞ்சம் தள்ளி வச்சிக்கோங்க

குரேஷி - இல்லிங்க டாக்டர் குழந்தை பால் குடிக்கிற பிள்ளைங்க.. அது எப்படி அம்மாகிட்ட இருந்து தள்ளி வச்சிக்க முடியும்

💙AC💙அமரனின்🔱சித்ராம்பிகை💙Kde žijí příběhy. Začni objevovat