பாகம் 33

Start bij het begin
                                    

டாக்டர் - இல்லம்மா ஊர்ல ஒரு முக்கியமான வேலை இருக்கு.. அதான் கிளம்புறேன்.. அப்புறம் குழந்தை எப்படி இருக்கா

அமரன் - பாப்பா உள்ள தூங்கிக்கிட்டு இருக்காங்க..

சித்ரா - போ அமரா போய் குழந்தையை தூக்கிட்டு வா டாக்டர் பாக்கட்டும்

அமரன் - குழந்தை நல்லா தான் இருக்காங்க.... குழந்தையை டாக்டர் பாக்குற அளவுக்கு ஒன்னும் குழந்தைக்கு பிரச்சனை இல்ல

சித்ரா - ஏய் நீ என்ன இப்படி பேசுற

டாக்டர் - இல்ல சித்ரா பரவாயில்ல.. அமரன் நான் உங்ககிட்ட கொஞ்சம் தனியா பேசணும்

அமரன் - வாங்க வெளியே போய் பேசுவோம்

சித்ரா - ஏன் என்ன பேச போற.. எதுவா இருந்தாலும் இங்கேயே பேசுங்க

டாக்டர் - இல்ல சித்ரா நான் அமரன் கிட்ட பேச தான் வந்தேன்

சித்ரா - இங்க பாருங்க நீங்க எல்லாரும் சேர்ந்து என்கிட்ட எதையோ மறைக்கிறீங்க...இந்த அமரன் காலையிலேயே எங்கேயோ வெளியே போயிட்டு வரேன்னு சொல்லிட்டு என்கிட்ட பொய் சொல்லிட்டு போயிருக்கான்...இப்போ நீங்க வந்து நிக்கிறீங்க... அப்போ உங்கள பாக்குறதுக்கு தான் அமரன் வந்தானா

அமரன் - சித்து இப்ப எதுக்கு நீ வக்கீல் மாதிரி துருவித் துருவி கேள்வி கேட்டுகிட்டு இருக்க.. என்ன பிரச்சனை உனக்கு

சித்ரா - எனக்கு ஒரு பிரச்சனையும் இல்ல..உன்னால தான் எனக்கு பிரச்சனை..உன்னை நான் எப்ப பார்த்தேனோ அப்போதையில் இருந்து தான் எனக்கு பிரச்சனை..

அமரன் - இப்போ எதுக்கு நீ தேவை இல்லாம பேசிக்கிட்டு இருக்க

சித்ரா - யார் தேவை இல்லாம பேசுறது.. இந்த டாக்டருக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்.. எனக்கு தானே டாக்டர் பழக்கம்..என்ன விட்டுட்டு டாக்டர் ஏன் உன் கிட்ட தனியா பேசணும்னு சொல்றாங்க..

அமரன் - ஆமா டாக்டருக்கும் எனக்கும் சம்மதம் இல்ல தான்.. ஆனா உனக்கும் எனக்கும் சம்பந்தம் இருக்குல்ல

💙AC💙அமரனின்🔱சித்ராம்பிகை💙Waar verhalen tot leven komen. Ontdek het nu